கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு. கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை உறவினர்கள், பொறுப்பாளர்கள் கையேற்க முன்வராதவிடத்து, சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிலரின் சடலங்களை பொறுப்பேற்க எவரும் முன்வராத நிலையில் பல சடலங்கள் வைத்தியசாலை பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், உடனடியாக சுகாதார மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட்டு, அரச செலவில் சடலங்களை தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்காக ஏற்படும் செலவினங்களை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அந்த மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரால் சுனந்த ரணசிங்க தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.