அடை மழையிலும் முல்லை மீனவர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, முல்லைத்தீவு மீனவர்கள் அடைமழையிலும் பாரிய அளவில் திரண்டு 15.12.2020 இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த இந்திய இழுவைப் படகுகளின் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரையில் மீனவர்கள் தொடர் போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு கடற்கரையில் மீனவர்களது குறித்த ஆர்ப்பாட்டமானது தொடங்கியது, தொடர்ந்து ஊர்வலமாக மாவட்டசெயலகம்வரையில் ஆர்ப்பாட்ட்காரர்கள் வருகைதந்தனர்.

மாவட்டசெயலகத்தினை வருகைதந்ததும், தமது கடற்பரப்பில்அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களுக்கு எதிராகவும், கடற்றொழில் அமைச்சர் மற்றும் அரசு, கடற்படைஎன்பவற்றிற்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு மீனவர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் கவனஞ் செலுத்துமாறு ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர், ஆளுநர் உள்ளிட்டவர்களுக்குரிய மகஜர் முல்லைத்தீவு மாவட்ட செயலர் க.விமலநாதனிடம் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் கையளித்திருந்தனர்.

அதனையடுத்து இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரையில் மாவட்டசெயலகத்திற்கு முன்பாக தகரப் பந்தல் அமைத்து தொடர்போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குறித்த போராட்டத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ்நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம், செலவராசா கஜேந்திரன் ஆகியோரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சாந்திசிறீஸ்கந்தராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், ஆண்டிஐயா புவனேஸ்வரன், மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், மாவடட வர்த்தகசங்கங்கம், பேருந்து உரிமையாளர்சங்கம், மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், பலநோக்கு கூட்டுறவுச்சங்கம், பனை தென்னைவளக்கூட்டுறவுச் சங்கம் என்பவற்றின் பிரதினிதிகள்என பலரும் இப் போராட்டத்தில் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.