காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் விமான விபத்து: ஒருவர் பலி

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் PT6 வகை பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது.

மேலும் குறித்த விமானத்தில் பயிற்சியை மேற்கொண்ட விமானியும் உயிரிழந்துள்ளதாகவும் விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை சீனக்குடாவிலிருந்து இன்று (15) காலை புறப்பட்ட இலங்கை விமானப்படைக்கு சொந்தமான PT-6 விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இதனை அடுத்து குறித்த விமானம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை விமானப்படை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.