ஒருஇலட்சம் வேலைவாய்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் நேர்முகப்பரீட்சை ஆரம்பம்..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபிட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 822 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் அரசாங்க தகவல் திணைக்கள ஊடகப் பிரிவிற்கு கருத்துத் தெரிவித்தார்.
நாடுபூராகவுமுள்ள வேலையற்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு ஒருஇலட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல்கட்டமாக 248 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கான ஆறு மாதகால பயிற்சி நெறிகள் இடம்பெற்று வருகின்றன. இவர்களுக்கான பயிற்சிகளை பலநோக்கு அபிவிருத்தி திணைக்களம் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.
இதன் இரண்டாங்கட்டமாக 574 பணியாளர்களை இணைத்துக் கொள்ளவதற்கான நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பில் இன்று முதல் நடைபெற்று வருகின்றது. இந்நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படுவோருக்கான ஆறு மாத பயிற்சி நெறி தொடர்ச்சியாக பலநோக்கு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படவுள்ளது.
இதுதவிர இவ்வாறுமாத பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்யும் பணியாளர்கள் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் திணைக்களங்களில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4
2 Shares
Like

 

Comment
Share

Comments

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.