கொரோனா -மேலும் 415 பேர் குணமடைவு….

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 415 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் குணமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் (20) பேலியகொடை மீன் சந்தை கொத்தணி தொடர்பில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 592 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர் (கொழும்பு மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக 253 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 124 பேரும், கண்டி மாவட்டத்தில் 62 பேரும், அடையாளம்)

இன்று (21) முற்பகல் 10.00 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக, அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,667 இலிருந்து 37,261 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,267 இலிருந்து 28,682 ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.