உயர்தரப் பரீட்சாத்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.

 

செயன்முறை பரீட்சையில் தோற்றும் மாணவர்கள், தமது பரீட்சை அனுமதி சீட்டை பரீட்சை மத்திய நிலையங்களுக்கு காண்பிப்பது கட்டாயமானது என பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ்.பிரணவதாஸன்  தெரிவித்தார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் பகுதிகளிலிருந்து பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமது பரீட்சை அனுமதிப் பத்திரத்தை, ஊரடங்கு அனுமதி சீட்டாக பயன்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தமது பரீட்சை அனுமதிப் பத்திரத்துடன், தமது அடையாளஅட்டையையும் காண்பிப்பது கட்டாயமானது என கூறப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்காக 0112 784 208, 0112 784 537, 0113 188 350 அல்லது 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புக் கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.