நுவரெலியாவில் விவசாயிகள் போராட்டம் – மகிந்தானந்த அளுத்கமகேவின் கொடும்பாவியும் எரிப்பு

(க.கிஷாந்தன்)

உர தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கொடும்பாவியை எரித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நுவரெலியா மாவட்ட பயிர்ச்செய்கையாளர்கள் இன்று (17) நுவரெலியா நகரத்தில் பிரதான வீதியில் பேரணியாக சென்று தமது போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில்  பெருந்திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பேரணியில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பின்னர் தபால் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

உரத்தட்டுப்பாட்டால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உரத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

உரத்தை இல்லாது செய்து, விவசாயத்தை அழிக்க வேண்டாம். கொவிட் பரவலுக்கு மத்தியில் பொருளாதார ரீதியில் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்களும் கடைகளை மூடி ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.