இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு மக்களுக்கு அழைப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையிலுள்ள இரத்த வங்கியில் கடந்த சில வாரங்களாக தேவையான குருதி போதிய அளவில் கிடைக்கவில்லை என்று யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்வதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் ...

மேலும்..

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…!

ஐக்கிய தேசிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர்களில் 40 க்கும் மேற்பட்டவர்கள், தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த ...

மேலும்..

மருதமுனையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தக் காணிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரச காணிகளில் பலவந்தமாக ...

மேலும்..

யாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…!

பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞரை வழிமறித்து தாக்குதல் நடத்திய கும்பல் ஒன்று அவரிடம் இருந்து கைத்தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணத்தினையும் பறித்துச் சென்றுள்ளனர். கொக்குவில் பொற்பதிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் நடந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் தலையில் ...

மேலும்..

நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு – தவிசாளர் த.தியாகமூர்த்தி

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் காரணமாக நல்லூர் பிரதேச சபைக்கு 7.5 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தவிசாளர் த.தியாகமூர்த்தி தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 1 ஆம் திகதியில் இருந்து தமது பிரதேச சபையின் எல்லைக்குள் இருக்கும் ...

மேலும்..

வவுனியாவில் இருவேறு கத்திக்குத்து சம்பவங்கள்: பெண்கள் உட்பட மூவர் காயம்

வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற இருவேறு கத்திகுத்து சம்பவங்களில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காதல் விவகாரம் காரணமாக கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாமடைந்துள்ளனர். இதேவேளை அலகல்லு ...

மேலும்..

அம்பாறையில் பலத்த காற்றுடன் கூடிய மழை: மின்சாரம் துண்டிப்பு

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்பாறை நகரப்பகுதி,  காரைதீவு,  கல்முனை, மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, மணல்சேனை மற்றும் சம்மாந்துறை, சவளைக்கடை , மத்திய முகாம் போன்ற பகுதிகளில்  வீசிய ...

மேலும்..

தமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் அரச இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்!

பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது தமிழீழ சைபர் படையணியென்ற பெயரில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சைபர் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இரண்டு வலைத்தளங்களையும் சீரமைக்க ...

மேலும்..

புலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் – கமல் குணரத்தன

கடந்த ஆட்சியின் போது தனித்து செயற்பட்ட புலனாய்வு அமைப்புகளை ஐக்கியப்படுத்து அவசியம் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பினை பேணுவதற்காக புலனாய்வு பிரிவினருக்குடி புத்துயுர் கொடுப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் இது இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார். தீவிரவாதத்தினையும் போதைப்பொருள் கடத்தற்காரர்களையும் ...

மேலும்..

இலங்கைக்கு வருகை தந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு கப்பல்கள்

இலங்கையில் தங்கியுள்ள பிலிப்பினியர்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு மீள அழைத்துச் செல்ல  BRP Davao del Sur  மற்றும் BRP Ramon Alcaraz  ஆகிய கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (சனிக்கிழமை) வருகைத் தந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக சொந்த ...

மேலும்..

நுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்

நுவரேலியா மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை ‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்றும் நாளையும் நுவரேலியா மாவட்டத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்த காலத்தில் அத்தியாவசியச் சேவைகள் தவிர மற்றவை நடைபெறாவது ...

மேலும்..

மக்களின் உணர்வைப் புரிந்து சுமந்திரன் செயற்படவேண்டும் – மாவை

சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் விவகாரம் நேற்று இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பாரியதொரு பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் கூட்டம் சுமூகமாகவ இடம்பெற்றதாக அறிய முடிகின்றது. இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்ற ...

மேலும்..

புலிகளை அழித்த ஒட்டுக் குழு புளொட்டும் ஆலாலசுந்தரம், தர்மரைக் கொன்ற ரெலோவும் சுமந்திரனைப் பற்றிக் கதைக்க என்ன தகுதி உண்டு?

Veluppillai Thangavelu என்பவரின் முகநூலில் இருந்து..... யதார்த்தம் யாதெனில் சுமந்திரனுக்கு பொய் பேசத் தெரியாது. தேர்தல் வெற்றி தோல்வியை மனதில் வைத்து மனம் ஒன்று நினைக்க வாய் வேறுவிதமாகப் பேசும் தந்திரம் தெரியாதவர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்லிவிடுபவர். இது அவரது பலமாகவும் ...

மேலும்..

தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை 9ஆவது நாளாக மீண்டும் ஒத்திவைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு ஆகியவற்றுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 ...

மேலும்..

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்தவர்களை தனிமைப்படுத்த கோரி தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார கால பகுதியில் மக்களை ஒன்று கூட்டி நிகழ்வுகளை மேற்கொண்டமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட ...

மேலும்..