வவுனியாவில் கிரவல் அகழ்வுப்பணியால் 320ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு: விவசாயிகள் கவலை

வவுனியா- கன்னாட்டி பெரியதம்பனை வீதியில் அமைந்துள்ள கிராமத்திலுள்ள மக்கள், தமது பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிரவல் அகழ்வுப்பணி காரணமாக 320ஏக்கர் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வாதார ஜீவனோபாயமான விவசாய தொழிலை கைவிடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் ...

மேலும்..

கொரோனாவிலிருந்து மேலும் 9 பேர் மீண்டனர்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 09 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இதுவரையில் 754 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை ஆயிரத்து 530 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது ...

மேலும்..

கொரோனா எதிரொலி: யாழ்.மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக, யாழ்.மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே து.ஈசன் இவ்வாறு ...

மேலும்..

தொண்டமானின் இழப்பு அனைத்து சிறுபான்மை மக்களின் இழப்பாகும் – சந்திரகுமார்

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இழப்பு மலையக மக்களுக்கான இழப்பு மட்டுமல்ல. அனைத்து சிறுபான்மை மக்களின் இழப்பாகுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஆறுமுகம் தொண்டமானின் இறப்பு தொடர்பாக இரங்கல் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மு.சந்திரகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “தொழிற்சங்கவாதியாக, அரசியல்வாதியாக ...

மேலும்..

மாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை, மக்களை கூட்டி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் மாவை ...

மேலும்..

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1540 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 7 பேர் கடற்படையினர் எனவும், மூவர் வெளிநாடுகளிலிருந்து மீண்டும் நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

மேலும்..

சரத் பொன்சேகாவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் சுமார் ஒரு மணித்தியாலம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 18ஆம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டதாக ...

மேலும்..

பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு உத்தரவு!

பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை அச்சடிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் தேசிய அச்சகக் கூட்டுத்தாபனத்துக்கு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, 116,900,000 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில், வாக்குச்சீட்டை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் தொடர்பில் ...

மேலும்..

உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நல்லத்தண்ணி – லக்ஸபான தோட்டத்தில் வாழைமலை பகுதியில் கடந்த 26ஆம் திகதி வலையில் சிக்கிய நிலையில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. காட்டுப்பன்றிகளிடமிருந்து மரக்கறி உற்பத்தியை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில், 6 அடி நீளமுடைய ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம்

யாழ் மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார மேம்பாட்டு குழு கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ...

மேலும்..

மோசடியாக பணம் பெற்ற சட்டத்தரணி: யாழில் சம்பவம்

நீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரிடம், அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டுமென கூறி அந்நபரிடம் 50 ஆயிரம் ரூபாய் பெற்று சட்டத்தரணி ஒருவர் மோசடி செய்துள்ளார். யாழில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த ...

மேலும்..

சுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக மத்திய செயற்குழு கூடி ஆராயும் – சம்பந்தன்

சுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன்,  தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும் கூட்டமைப்பின் ...

மேலும்..

வட- கிழக்கு இணைப்புக்கு அடிக்கும் சாவுமணியே ஜனாதிபதி செயலணி- சிவசக்தி

வடக்கு- கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு அரசு அடிக்கும் சாவுமணியே ஜனாதிபதி செயலணியென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதாவது கிழக்கு ...

மேலும்..

இலஞ்சம் பெற்ற பிரதேச செயலாளர்- உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில், சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன்  10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார். சப்ரிகம வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் உள்ள ...

மேலும்..

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல்  நாளைமறுதினம் அதிகாலை 3 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, 2, 3, 7, 8, 9, மற்றும் ...

மேலும்..