உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

நல்லத்தண்ணி – லக்ஸபான தோட்டத்தில் வாழைமலை பகுதியில் கடந்த 26ஆம் திகதி வலையில் சிக்கிய நிலையில் கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்ட கருஞ்சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

காட்டுப்பன்றிகளிடமிருந்து மரக்கறி உற்பத்தியை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில், 6 அடி நீளமுடைய ஆண் கருஞ்சிறுத்தை கடந்த 26 ஆம் திகதி அதிகாலை சிக்கியது.

வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் வைத்தே அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பான முறையில் ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இந்தநிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடப்படுகின்றது.

0Shares

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்