க. பொ. த. சாதாரண தர பரீட்சை மீள் திருத்தம் தொடர்பிலான அறிவிப்பு

க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பித்தவர்களின் முடிவுகள் இவ்வருட சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

க. பொ. த. சாதாரண தர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மீள் பரீட்சை பெறுபேறுகள் மே மாதம் இரண்டாவது வாரத்திற்கு முன்னர் வழங்கப்படும் என  பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்ததாகவும் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.