அமைச்சர் ஆறுமுகத்தின் உயிரிழப்பையடுத்து வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் நேற்றிரவு உயிரிழந்ததையடுத்து அவரின் சடலம் தலங்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்மார் உள்ளிட்ட அரசியல்வாதிகள் இன்றிரவு அங்கு படையெடுத்துள்ளனர். அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் அமைச்சர்களான ...

மேலும்..

ஒரேநாளில் 135 பேருக்கு கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கை எகிறியது 1317 ஆக!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 39 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1317 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்..

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலம் ஆனார்….

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மரணமானார். மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக செயற்பட்டு வந்த அவர், தனது 55ஆவது வயதில் காலமானார். ஆளும் அரசாங்கங்களுடன் பேரம் பெசும் சக்தியை வளர்த்து வந்த ஆறுமுகன் தொண்டமான, தற்போதைய அரசாங்கத்தின் மிகப் ...

மேலும்..

மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்றுமட்டும் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும்..

ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி விமான நிலையம் மீள திறக்கத் திட்டம் – ஜனாதிபதியிடம் முன்மொழிவு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் இயங்கச்செய்வது தொடர்பான திட்டங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாடு வழமைக்கு திரும்பியுள்ளதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான ...

மேலும்..

சட்டவிரோத செயற்பாடுகளை அறியத்தாருங்கள்- வன்னி பிரதிபொலிஸ்மா அதிபர்

வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை தமக்கு வழங்குமாறு வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு ...

மேலும்..

பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த மனுமீதான விசாரணை செப்டம்பர் வரை ஒத்திவைப்பு

கட்டாய விடுமுறையில் அனுப்பியதற்கு எதிராக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு செப்டம்பர் 09 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு முர்து பெர்னாண்டோ எஸ்.துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகிய மூவரைக் கொண்ட உயர் ...

மேலும்..

யாழில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பின

யாழ்ப்பாண மாவட்டத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் யாவும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக யாழ்ப்பாண பிரதம தபாலக அதிபர் திருமதி. சாந்தகுமாரி பிரபாகரன் தெரிவித்தார். தற்போதைய நிலைமையில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ...

மேலும்..

கிளிநொச்சியில் கொரோனா சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் விபத்து

கிளிநொச்சி  – இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொரோனா சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த அம்புலன்ஸ் வண்டி ஏ-9 வீதியால் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் சென்றவேளை, கொடிகாமம் – புத்தூர் சந்தியில் முன்னால் சென்ற ...

மேலும்..

திவிநெகும நிதி மோசடி: பசில் ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணை செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2.991 பில்லியன் ரூபாய் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை ...

மேலும்..

மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,199 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது தொற்று உறுதியானவர்களில் 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

மேலும்..

புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பம்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாகியது. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அகழ்வு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்ற வருகின்றன

மேலும்..

கட்டாரில் தங்கியுள்ள இலங்கையர்களை நாளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

கட்டாரில் தங்கியுள்ள 273 இலங்கையர்கள் நாளைய தினம் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர். இதற்கமைய அவர்கள்  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டாரின் டோகா நகரில் இருந்து இன்று காலை 5.45 மணிக்கு இலங்கையர்கள் 273 ...

மேலும்..

மருத்துவ பீட மாணவர்களுக்காக எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும்

மருத்துவ பீட மாணவர்களின் பரீட்சைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மோகன் டி சில்வா அறிவித்துள்ளார்.

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 6 ஆவது நாள் பரிசீலனைகள் முடிவடைந்தன

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான 6 ஆவது நாள் பரிசீலனைகள் முடிவடைந்தன. மேலதிக பரிசீலனைக்காக நாளை (புதன்கிழமை) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும்..