யாழ். சுன்னாகம் பகுதியில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த சிலர் கூரிய ஆயுதங்களுடன் கைது

யாழில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து இன்று (திங்கட்கிழமை) மாலை மூவரும் கைது செய்யப்பட்டனர் ...

மேலும்..

வவுனியாவில் காட்டில் தனிமையில் நின்ற ஒரு மாத யானை குட்டி மீட்பு!

வவுனியா நிருபர் வவுனியா போகாஸ்வேவ - பதவிய பிரதான வீதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் தனிமையில் நின்ற ஒரு மாத குட்டி யானையினை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதியில் தனிமையில் ஒர் யானைக்குட்டி நிற்பதாக இன்று (24.05) அதிகாலை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு ...

மேலும்..

ஊரடங்குச் சட்டம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்…

பாறுக் ஷிஹான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம்  காரணமாக  கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில்   பொதுமக்களின் நடமாட்டம்  இன்றி பாதைகள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக இம் மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை,மத்தியமுகாம்,  அக்கரைப்பற்று ,பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பெருநாள் தின ...

மேலும்..

இலங்கையில் கொரோனா மரணம் 10 ஆக அதிகரித்தது குவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண்ணே சாவு

குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை இராணுவ முகாமில் கட்டாயத் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் இன்று அதிகாலை திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார். இதன்பின்னர் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த பெண் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது எனச் ...

மேலும்..

மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,162 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,162 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றுமட்டும் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஏற்கனவே குவைத்தில் இருந்து நாடுதிரும்பிய மேலும் ...

மேலும்..

நடிகையை பார்க்க இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை!

தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கொட்டைக்காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சூரியகுமார் தேனுஜா என்ற ...

மேலும்..

இலங்கையில் கொரோனாவினால் 10 ஆவது மரணம் பதிவானது

குவைத்தில் இருந்து நாடுதிரும்பு தனிமைப்படுத்தப்பட்ட 52 வயதுடைய பெண் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணே திடீரென ...

மேலும்..

கொவிட்-19 நெருக்கடியிலிருந்து முக்கிய நிறுவனங்களை மீட்பதற்கான திட்டத்தை வகுக்கும் அரசு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முக்கிய பெரிய நிறுவனங்களை மீட்பதற்கான திட்டத்தை பிரித்தானிய அரசு வகுத்துள்ளது. இவ்வாறான நிறுவனங்களை சரிவிலிருந்து காப்பாற்ற வழங்கும் நிதி உதவி செயற்திட்டத்திற்கு, ‘Project Birch’ என பெயரிடப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தை போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 13 கடற்படை வீரர்கள் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 13 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்களில் 313 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 695 பேர் குணமடைந்துள்ளதாக ...

மேலும்..

ஐ.சி.சி. வகுத்துள்ள சில வழிமுறைகளில் குளறுபடிகள் உள்ளன: ஷகீப் ஹல் ஹசன்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபை வகுத்துள்ள சில விடயங்களில் தனக்கு சந்தேகம் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஷகீப் ஹல் ஹசன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து சர்வதேச போட்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில் ...

மேலும்..

நிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு!

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் தொடங்கி ...

மேலும்..

வவுனியாவில் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா கிருமி தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்பாள் ஆலயம், வெளிச்சம் அறக்கட்டளை மற்றும் வவுனியா மாவட்ட சமூக சேவை திணைக்களத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய கொவிட்19 சுகாதாரத்தை மேம்படுத்தல் பணியின் ...

மேலும்..

சமீபத்தில் நாடுதிரும்பிய 80 பேருக்கு கொரோனா – பிரஜைகளை அழைத்துவரும் நடவடிக்கையை பரிசீலனை செய்யும் அதிகாரிகள்

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை பரிசீலனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு ...

மேலும்..

சமூக இடைவெளியை பேணாத நபர்கள் கைது செய்யப்படுவர் – பொலிஸ் எச்சரிக்கை

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாளை முதல் முன்னெடுக்கவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான விசேட சுற்றறிக்கை ஒன்று ...

மேலும்..

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றமையினால், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுவந்த மீனவர்கள் தங்களது தொழிலை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆழ்கடலில் ஏற்கனவே போடப்பட்ட ஒரு சில மீனவர்களின் ...

மேலும்..