கொரோனா அச்சத்திற்கு இடையே மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 1,038 இந்தோனேசியர்கள்

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 1,038 இந்தோனேசிய தொழிலாளர்களை மலேசிய அரசு நாடுகடத்தியிருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா, மற்றும் மேடான் நகருக்கு இவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நாடுகடத்தப்பட்டுள்ளவர்கள், வேலைக்கான விசாயின்றியும் விசா காலம் கடந்தும் மலேசியாவில் வேலை செய்ததன் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் நாடுகடத்தப்படுவது வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை என்றாலும், தற்போதைய நாடுகடத்தல் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் நெருக்கத்தைக் குறைக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக, மலேசியாவில் மக்கள் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச உயிரிழப்பு!

கொரோனா வைரஸின் அதிதீவிரத் தாக்கம் உலகம் முழுவதும் மனித இழப்பையும் பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தொற்று கனடாவிலும் தற்போது வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது. கனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 383 ...

மேலும்..

கொழும்பில் கொரோனா பாதிப்பு உச்சம் – 47 பேருக்குத் தொற்று

இலங்கையில் 15 மாவட்டங்களில் 233 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 28 ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் திருட்டுச்சம்பவம் அதிகரிப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்) ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள காலப் பகுதியில், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதிகளில், வர்த்தக நிலையங்கள், வீடுகள், பாடசாலைகள் போன்ற இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால் பிரதேச மக்கள் அச்சத்தில் ...

மேலும்..

பிரித்தானியாவில் இரண்டரை லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் – எச்சரிக்கும் எதிர்க்கட்சி

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பிரித்தானியா வேகமாக செயற்படவில்லை என பிரித்தானிய எதிர்க் கட்சி தலைவர் கெயிர் ஸ்ட்ரோமர் குற்றம் சுமத்தியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் சீனாவில் ஆரம்பித்தாலும் அதன் தாக்கம் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் மிக விரைவாக நிலைகொள்ள ...

மேலும்..

கொரோனா தடுப்பு – அமெரிக்காவுக்கு பாடம் சொல்லும் சீனா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா தனது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது. சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரவலானது உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் திறம்பட செயற்பட உலக சுகாதாரம் தவறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ...

மேலும்..

அடுத்த படத்திற்கு அதிரடியாய் ரெடியாகும் விஜய்.. கட்டுமஸ்தான உடலில் மிரட்ட போகும் தளபதி 65

மாஸ்டர் படத்தை அடுத்து தளபதி விஜய் தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டாராம். ஆனால் இன்னும் தளபதி 65 படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவராத நிலையில் கொஞ்சம் அப்செட்டில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ...

மேலும்..

குறைந்த செலவில் பெரிய அளவில் கல்லா கட்டும் அட்லீ.. ஊருக்கே பழைய சோறு, உனக்கு மட்டும் பிரியாணியா?

தமிழ் சினிமாவில் உள்ள அனைவரும் பொறாமைப்படும் ஒரே ஒரு இயக்குனர் என்றால் அது அட்லீ மட்டும்தான். வெறும் நான்கு படங்கள் மட்டுமே இயக்கிய நிலையில் தற்போது அவரின் சம்பளம் 25 கோடிக்கும் மேல். அட்லீ இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த ...

மேலும்..

கந்தளாயில் அழுகிய நிலையில் ஏழாயிரம் கிலோ மரக்கறிகள் மீட்பு.

 எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் கந்தளாய் பிரதேச சபையின் ஏற்பாட்டில்  கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட ஏழாயிரம் கிலோ மரக்கறி வகைகள் அழுகிய நிலையில் அப்பகுதியிலுள்ள மக்கள் ...

மேலும்..

நிந்தவூர் பகுதியில் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியவர் கைது!

பாறுக் ஷிஹான் சமுர்த்தி அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்திய ஒருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம்  சம்பவம் அம்பாறை மாவட்டம் ஒலுவில் நிந்தவூர் பிரதான வீதியில் உள்ள கழியோடை  பாலத்தில் சம்மாந்துறை பொலிசாரினால் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட சோதனைச்சாவடியில் புதன்கிழமை(14) அதிகாலை ...

மேலும்..

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற சுமார் 350 குடும்பங்களுக்கு நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்களத்தின் ஏட்பாட்டில் சமூக நேயப்பணி….

கொரோனா வைரஸ் (Covid 19) தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற சுமார் 350 வரிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் சமூக நேயப் பணியில் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக்கழகத்துடன் இணைந்து நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலய, பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன ...

மேலும்..

எந்திரன் படத்தில் நடிகர் மனோஜ் நடித்துள்ளார் தெரியுமா.. ஆச்சர்யபடும் அவர் காட்சியை பாருங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் எந்திரன். முதல் முதலில் எந்திரன் படத்தில் கமலஹாசன் நடிக்க இருந்தது. அந்த வாய்ப்பை அவர் தவற விடவே அதன்பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ...

மேலும்..

பொலிஸாரின் 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை – சுமார் 1000 ற்கும் மேற்பட்டவர்கள் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட 24 மணிநேர விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சுமார் 1001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்குச் சட்ட அனுமதிபத்திரமின்றி வீதிகளில் நடமாடியவர்களும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் ...

மேலும்..

இடர் வலையங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்

இடர் வலையங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக நீக்கப்படுகின்றது. அந்தவகையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுல் இருக்கும் ...

மேலும்..

கோகிலாக்கண்டி மக்களுக்கு உலர் உணவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தென்மராட்சியின்கோகிலாக்கண்டி, தச்சன்தோப்பு மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த உலர் உணவுப் பொதிகளுக்கான அனுசரணையை லண்டன் மாநகரில் வசிக்கும் தாயக உறவுகள் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்ட - சமூக அக்கறையுடைய - சேவை நோக்குக் ...

மேலும்..