இலங்கை செய்திகள்

கொரோனா நிவாரண பணி: அம்பாறை – வீரச்சோலை கிராமத்தில் இரண்டாம் கட்டமாக முன்னெடுப்பு

அம்பாறை – வீரச்சோலை கிராமத்தில் காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகம், முருகண்டி நேசக்கரங்கள் கனடா அமைப்புடன் இணைந்து கொரோனா நிவாரண பணியினை இரண்டாம் கட்டமாக முன்னெடுத்துள்ளன. இக்கிராமத்தில் வசிக்கின்ற 194 குடும்பங்களில் இரண்டாம் கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 123 குடும்பங்களுக்கான ...

மேலும்..

வெல்லம்பிடிய பகுதியில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ விபத்து

வெல்லம்பிடிய – வென்னவத்த பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருப்பு களஞ்சியசாலை ஒன்றிலேயே குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

வன்னி புதிய கட்டளைத்தளபதி வவுனியா அரசாங்க அதிபருடன் சந்திப்பு

வன்னி புதிய கட்டளைத்தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜெயசிறி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்ற வன்னி கட்டளைத் தளபதிக்கு மாவட்ட செயலகத்தில் சிங்கள மற்றும் தமிழ் முறையிலான வரவேற்பு ...

மேலும்..

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்று விசேட கலந்துரையாடல்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருக்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப் பெரும தலைமையில் கல்வி அமைச்சில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. இந்த கலந்துரையாடல்களின் போது பாடசாலைகளை மீள ...

மேலும்..

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் மனோகரன் வயல் பிரதேசத்தில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சங்கர்புரம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (திங்கட்கிழமை) றாணமடு பகுதியிலுள்ள வயலுக்குச் சென்றவர் மாலை வேளையாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் வயலுக்குச் ...

மேலும்..

வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ளவர்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்: சஜித் கோரிக்கை

சீசெல்ஸில் இருந்து நோயாளிகளை அழைத்து வந்து சிகிச்சையளிக்கும் செயற்பாட்டைக் காட்டிலும் வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்கள் தொடர்பாகவும் அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து மத்திய கிழக்கு மற்றும் ...

மேலும்..

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 17 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 17 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று முழுமையாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் கொரோனா ...

மேலும்..

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு..!

இந்தவருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மே 21 வரை மொத்தம் 19 ஆயிரத்து 474 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் சமீபத்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இம்மாதம் மூன்றாம் வாரத்தின் முடிவில், நாடு முழுவதும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 485 ...

மேலும்..

பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 5000 பேருந்துகளுக்கும் அதிகமான பேருந்துகளை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க ...

மேலும்..

கொரோனா தொற்று முற்றாக நீங்கவில்லை – யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பாக ...

மேலும்..

மேல் மாகாணத்தில் இருந்து மேலும் 3000 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மேல் மாகாணத்தில் இரண்டு மாதங்களாக தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமலிருந்த மேலும் 3,000 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சுமார் 2,000 பேர் பிலியந்தலவில் ...

மேலும்..

அம்பாறையில் கடல் கொந்தளிப்பால் மீனவர்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர். பெரிய நீலாவணை, மருதமுனை, கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல்மட்ட வேறுபாடும் கடல்கொந்தளிப்பு நிலையுமே இதற்கான காரணமென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடல் ...

மேலும்..

20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குத் தாக்கல்; 8,170 பேருக்கு எதிராக அபராதம்

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் நாடு முழுவதும் 65 ஆயிரத்து 930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 18 ஆயிரத்து 614 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, ...

மேலும்..

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் மீது அரசாங்கம் வரி சுமைகளைத் திணிக்கிறது – வேலுகுமார்

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்கி அவர்கள் மீண்டெழுவதற்கு நேசக்கரம் நீட்டவேண்டிய அரசாங்கம், அவர்கள் மீது வரி சுமைகளைத் திணித்து மனிதநேயமற்ற வகையில் ஆட்சியை முன்னெடுக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி ...

மேலும்..

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது!

இலங்கையில் இதுவரை 56 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 1,347 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்தவருடம் பெப்ரவரி மாதம் 18 ஆம் ...

மேலும்..