இலங்கை செய்திகள்

கொரோனா குறித்து வெளியிடப்படும் புள்ளிவிபரங்களில் பொய் இல்லை – சுகாதார அமைச்சு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் துல்லியமானவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிபரங்கள் பிழையானவை வேண்டுமென்றே குறைத்து காண்பிக்கப்படுபவை என சுயாதீன தொழில்சார் நிபுணர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பின் அறிக்கையொன்று தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையில், இலங்கையில் தற்போது ...

மேலும்..

இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு பிணை இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு பிணை

இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரையும் கடும் நிபந்தனைகளுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. உரும்பிராய் பகுதியில் கடந்த சனிக்கிழமை இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்த போது, ...

மேலும்..

யாழில் முதலாவதாக கொரோனா தொற்றுக்கு இலக்கானவர் வீடு திரும்பினார்

யாழில். கொரோனா தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிதாக கட்டட ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்வது தொடர்பாக சுவிஸ் நாட்டிலிருந்த ...

மேலும்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார். சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்னவின் பிணை மனு மீதான விசாரணையை 02ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலின்போது சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  ராஜித சேனாரட்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார். சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்னவின் பிணை மனு மீதான விசாரணையை 02ஆம் ...

மேலும்..

ஹிஜாஸ் ஹில்புல்லா குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கரிசனை கடிதம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹில்புல்லா தொடர்பாக  ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு கரிசனை கடிதமொன்றை எழுதியுள்ளது. கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு தனது ருவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாத தடைச்சட்டத்தின் ...

மேலும்..

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (புதன்கிழமை) காலை வெளியிட்ட அறிக்கையில் இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ...

மேலும்..

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து இரண்டு வாரங்களின் பின்னரே தீர்மானம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் வைக்கப்பட்டுள்ளது

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள், பொது மக்கள் என பலரும் ...

மேலும்..

யாழில் வீடொன்றின் மீது தாக்குதல் – வீட்டிலிருந்தவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாசியப்பிட்டியில் நீண்டகால பகை காரணமாக இருபதுக்கும் மேற்பட்டோர் கொண்ட குழு ஒன்று வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அந்த வீட்டிலிருந்த ஒருவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதலில் வீட்டிலிருந்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

“மலையக தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர்” – ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு செய்தி, தாங்க முடியாத துயரத்தினை அளித்துள்ளதாக தமிழக அரசியல் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஸ்டாலின் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகன் தொண்டமான் இந்திய ...

மேலும்..

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மலையக மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒயாது ஒலித்த குரல் மௌனித்து விட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மேலும், ஆறுமுகன் ...

மேலும்..

யாழில் வெடிப்புச் சம்பவம் – பொலிஸ் உத்தியோகத்தர் காயம்

யாழ். வடமராட்சி கிழக்கு வல்லிபுர ஆலயத்தை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸார் ஒருவர் காயமடைந்துள்ளார். வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு அருகில் உள்ள முச்சந்தியிலையே இன்று (புதன்கிழமை) குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மண் அகழ்வுகள், மண் கடத்தல்களை தடுக்கும் நோக்குடன் ...

மேலும்..

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர புதிய முறைமை!

கொவிட் 19 நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் நிர்க்கதியாகவுள்ள அல்லது பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக புதிய முறைமையொன்று தயாரிக்கப்படவுள்ளது. இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது புதிய நிகழ்ச்சித்திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் ...

மேலும்..

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு சுகாதார பிரிவு விடுத்துள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கமைய குறித்த தூதரகம் செயற்பட இணங்கியதை தொடர்ந்து, திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த தூதரகம் எதிர்வரும் மே 28ஆம் திகதி ...

மேலும்..

பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 7ஆவது நாள் விசாரணை இன்று

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (பதன்கிழமை) ஏழாவது நாளாகவும் உயர்நீதிமனறில் ...

மேலும்..