இலங்கை செய்திகள்

ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் – சிவசக்தி ஆனந்தன்

மலையக தமிழ் மக்களின் உரிமைக்குரலான ஆறுமுகனின் இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறித்து ...

மேலும்..

மேலும் 7 கடற்படை வீரர்கள் குணமடைந்துள்ளனர்!

மேலும் 7 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். கடற்படை பேச்சாளர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரையில் 351 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. பூநகரி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ். ...

மேலும்..

ஆறுமுகம் தொண்டமானின் வெற்றிடம் விரைவில் தகுதியுடையவரால் நிரப்பப்பட வேண்டும் – சி.வி.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானின் வெற்றிடம் விரைவில் தகுதியுடையவரால் நிரப்பப்பட வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆறுமுகம் தொண்டமானின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கள் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், அவர் மேலும் ...

மேலும்..

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் வருடாந்த கும்பாபிசேக தின மகா சங்காபிசேகம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிசேக தின மகா சங்காபிசேகம் நேற்று(புதன்கிழமை) சிறப்பாக நடைபெற்றது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக காணப்படுகின்றது. நேற்றைய தினம் விசேட பூஜைகளுடன் மாமாங்கேஸ்வரர் ஆலய ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நாடாளுமன்ற ஒன்றுகூடல் மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும்..

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது. இதில் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடயம் தொடர்பாக சகல ஆளுநருக்கும் ...

மேலும்..

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள்

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பான ஆலோசனைகள் சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ‘நவ ஜீவன ரடாவக் உதேசா’ என கூறப்படும் புதிய வாழ்க்கை கட்டமைப்பு முறைக்காக என குறித்த ஆலோசனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த தொடர் ஆலோசனைகள் மூலம் ...

மேலும்..

மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்!

கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கணக்காய்வாளர் நாயகம் W.B.C. விக்ரமரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

தொண்டமானின் இறுதிக்கோரிக்கை நிறைவேற்றப்படும் என்கிறார் மஹிந்த!

தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆறுமுகன் தொண்டமான் தன்னிடம் இறுதியாக கேட்ட விடயமும் இதுதான் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே அவர் இந்த வியடத்தினைக் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று ...

மேலும்..

ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை – அகிலவிராஜிற்கு பதில் வழங்கினார் சுஜீவ

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை எவருக்கும் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேறு கட்சிகளில் இணைந்துகொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய ...

மேலும்..

கோடீஸ்வரனுக்கு தமிழ் சி.என்.என். இன் பிறந்ததின நல்வாழ்த்துக்கள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட மக்களின் மனங்களை வென்றவரும் ஆகிய கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களுக்கு இன்று பிறந்த தினம். இன்றைய இந்த நன்னாளில் கோடீஸ்வரன் அவர்கள் அரசியலில் மேலும் வளர்ச்சிப் படிநிலைகளை ...

மேலும்..

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய 178 பேர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு ...

மேலும்..

முக்கிய தகவல்கள் சிலவற்றினை வெளியிட்டது கல்வியமைச்சு!

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் ...

மேலும்..

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,182 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,182 மில்லியனாக அதிகரித்துள்ளது. சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் ஒரு லட்சம் ரூபாவையும், பிலியந்தலை ஹெடிகம, ஸ்ரீ சுதர்ஷனாராமாதிபதி சங்கைக்குரிய நாகியாதெனியே ...

மேலும்..