இலங்கை செய்திகள்

பங்களாதேஷிலிருந்து 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பங்களாதேஷில் சிக்கியிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். டாக்கா விமான நிலையத்திலிருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.50 அளவில் இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் யூ.எல் – 1423 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் ...

மேலும்..

கடற்றொழில் படகுகளை தரைக்கு கொண்டுவரும் பணியில் கடற்படை கப்பல்

அம்பன் சூறாவளியினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு அருகாமையில் இழுத்துச்செல்லப்பட்டு கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சமுதுர’ கப்பல், ஈடுபட்டுள்ளது. கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீன்பிடிப் படகுகளை ...

மேலும்..

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் எதிர்வு கூறப்பட்டுள்ளது!

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. வானிலை அவதான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை ...

மேலும்..

பொலிஸ் அதிகாரிகள் 35 பேருக்கு பதவியுயர்வு

பொலிஸ் அதிகாரிகள் 35 பேர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு ...

மேலும்..

வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலை மாணவர்களினால் இரத்ததான முகாம்!

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் இரத்ததான முகாம் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் கணித பாட ஆசிரியர் இறைபதமடைந்த எஸ்.ஹேமராஜனின் ஏழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வருடா வருடம் நடைபெறும் இரத்ததான நிகழ்வு கல்லூரி அதிபர் ...

மேலும்..

தமிழரசுப் பொதுச் செயலாளரின் முயற்சியால் ஆலங்குளம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக அன்றாட வாழ்வாதாரத்தினை இழந்துள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்குப் பணிகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களின் முயற்சிகள் மூலம் பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் வாகரை பிரதேச ...

மேலும்..

கடந்த 24 மணித்தியாலங்களில் 515 பேர் கைது!

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரையான 24 ...

மேலும்..

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய்

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, கவாசகி (Kawasaki) என்ற நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள் மிகுந்த ...

மேலும்..

மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பை சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் ...

மேலும்..

முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்

நாட்டின் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் இலங்கைவாழ் முஸ்லிம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈதுல் பித்ர் எனப்படும் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாம் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகின்றமையினால் ஏழைகளின் பசியை அறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற படிப்பினையை நோன்பு உணர்த்துகின்றது. புனித ரமழான் மாதத்தில் ...

மேலும்..

பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’ – ரிஷாட்டின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித நோன்புப் பெருநாள் தினத்திலிருந்தாவது நாட்டின் நிலைமைகள் சீரடைய அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘கொவிட் – 19 ...

மேலும்..

யாழில் ஊரடங்கு வேளை பொலிஸார் மீது வாள்வெட்டு – இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற பொலிசார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கையில் காயமடைந்துள்ளார். வலி.வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை ...

மேலும்..

கொவிட் பிரச்சினைக்கு மத்தியில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு இந்திய – இலங்கை தலைவர்கள் இணக்கம்

சுமுகமான தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்டநேற்று(சனிக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளையும் கொவிட் பிரச்சினைக்கு மத்தியிலும் மேலும் மேம்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர். ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இந்திய பிரதமருடன் உரையாடிய ஜனாதிபதி பரஸ்பர ...

மேலும்..

ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பெறுமானங்கள் உலகிற்கு அமைதியை கொண்டுவரட்டும் – ஜனாதிபதி வாழ்த்து

ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பெறுமானங்கள் உலகிற்கு அமைதியை கொண்டுவரட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கையின் இஸ்லாமியர்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தியில் மேலும் ‘உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரிப்பு

இலங்கையில் நேற்று மொத்தமாக 21 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 89 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 660 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 420 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் ...

மேலும்..