பொலிஸ் அதிகாரிகள் 35 பேருக்கு பதவியுயர்வு
பொலிஸ் அதிகாரிகள் 35 பேர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மே மாதம் 9ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்கள் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு பிரிவுகளில் கடமையாற்றவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தள்ளது.
கருத்துக்களேதுமில்லை