இலங்கை செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் அதா உல்லா தலைமையில் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் நெறிப்படுத்தலில் புதன்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையில் ...

மேலும்..

சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு உயர்பதவிக்கான கடிதம் வழங்கி வைப்பு!

  (அபு அலா) வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பதில் செயலாளராக ஏ.மன்சூர் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம்.நசீர் ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற செந்தில் ...

மேலும்..

தமிழ் சிங்களப் புதுவருடத்தின் போது பிரதான எதிர்கட்சி நிலைத்திருக்காது! வஜிர அபேவர்த்தன ஆரூடம்

  எதிர்க்கட்சியில் இருக்கும் பிரதான அரசியல் கட்சி எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடமாகும்போது நிலைத்திருக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற சேவைகளை நவீன மயமாக்கும் செயற்றிட்டம்!

  நூருல் ஹூதா உமர் கனேடிய உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தால் அமுல்படுத்தப்படுகின்ற உள்ளூர் பெண் தலைமைத்துவத்தை வலுவூட்டுவதன் ஊடாக உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை நவீனமயமாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு- கோறளைப்பற்று பிரதேச சபைக்கான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளன ...

மேலும்..

ஆலய அலங்கார பணியில் ஈடுபட்ட இளைஞர்களைத் தாக்கிய கும்பல்!

  கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதி விநாயகர் ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை இரவு அலங்கார பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மீது அதே கிராமத்தைச் சேர்ந்த ரவுடிக்கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த நான்கு இளைஞர்கள் உடனடியாக அவசர அம்புலன்ஸ் மூலம் ...

மேலும்..

வவுனியா பல்கலை மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிப்பு! சிங்கள மயமாவதாகக் குற்றச்சாட்டு

வவுனியா பல்கலைக் கழகத்தின் மாணவர் வரவேற்பு பதாதையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. வவுனியா பல்கலைக் கழகத்தில் 2021 (22) ஆம் வருடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வவுனியா பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகியுள்ள பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை வவுனியா பல்கலைக் ...

மேலும்..

வீட்டுக் கூரையினை உடைத்து காத்தான்குடியில் நகை திருட்டு!  4 இளைஞர்கள் கைது

உரிமையாளர்கள் வீட்டிலில்லாத போது வீட்டு கூரையை உடைத்து வீட்டினுள் இறங்கி நகைகளைத் திருடிய 4 இளைஞர்களைக் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர் எனக் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள டீன் வீதியில் ...

மேலும்..

போதை அச்சுறுத்தலை அனைவரும் ஒன்றிணைந்தாலே முறியடிக்கமுடியும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருத்து

போதைப்பொருள் கடத்தல் வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அனைவரும் ஒன்றிணைந்தே இல்லாமல் செய்ய வேண்டும் என கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தெரிவித்துள்ளார். பொலிஸ் ஆலோசனை குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் ...

மேலும்..

அலிசப்ரி ரஹீம் எம்.பிமீது மற்றுமொரு குற்றச்சாட்டு!

புத்தளம் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்  அலி சப்ரி ரஹீம் அரசாங்கத்துக்குச்  சொந்தமான 214 ஏக்கர் காணியை பல வருடங்களாக சட்டவிரோதமாக அனுபவித்து வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே  இது தெரிய வந்துள்ளது. மேலும், அந்தக் காணி  தனியார் நிறுவனம் ...

மேலும்..

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மலையகத்துக்கு பயணம்! அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி  மார்க் அன்ட்ரூ ப்ரான்ஸ், மலையகத்துக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ...

மேலும்..

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான நிலக்கரியுடன் கப்பல்கள் வருகை! அமைச்சர் காஞ்சன தகவல்

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்திக்காக 2023-24 இற்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியை ஆரம்பித்து வியாழக்கிழமை முதல் தொகுதி நிலக்கரி இறக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் மேலும் 40 ...

மேலும்..

லயன்ஸ் கழகங்களினால் மூக்குகண்ணாடி வழங்கல்

சுன்னாகம் லயன்ஸ் கழகம் மற்றும் கைதடி லயன்ஸ் கழகம் ஆகியவற்றின் அனுசரணையில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணிவரை சுன்னாகம், கந்தரோடை கற்பக்குணையில் உள்ள கலைமதி சனசமூக நிலைய மண்டபத்தில் லயன் மகாதேவா ...

மேலும்..

பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை!

கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம்  நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளூம் போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை அதிபர்களிடம் கேட்டறிந்து கொண்ட மாநகர ஆணையாளர், அவற்றை நிவர்த்தி ...

மேலும்..

கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையாது – தம்மிக பெரேரா

கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சியடைய முடியாது என முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். கண்டியில் கல்வி நிலையம் ஒன்றினை திறந்துவைத்து அங்கு உரையாற்றும் போதே தம்மிக பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அண்மையில் குறித்த ...

மேலும்..

மதுபானசாலையை அகற்றுமாறுகோரி பொதுமக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் உடனடியாக மதுபானசாலை அகற்றுமாறும், அவ்வாறு மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் ...

மேலும்..