இலங்கை செய்திகள்

உளவளப் பயிற்சிநெறிகள் ஆசிரியர்களுக்கு தேவை!

சிறுவர் அபிவிருத்தி எனும் போது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி தேவையென யாழ்.மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

மேலும்..

ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பொதுஜன பெரமுனவே தடை!  தயாசிறி ஜயசேகர சாடல்

ஜனாதிபதி எடுக்கும் முயற்சிகளுக்கு, அரசாங்கத்தின் பிரதான கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - 'ஜனாதிபதி செய்யும் முயற்சிக்கு, ...

மேலும்..

பொதுஜன பெரமுனவிற்குள் குழப்பமா? இல்லை என்கிறார் அமைச்சர் பிரசன்ன

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பொதுஜன பெரமுனவிற்குள் எந்தப் பிரச்சினையும் கிடையாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்கள் ...

மேலும்..

ஜப்பான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, யாழ்ப்பாணத்திற்கு இன்று (10) உத்தியோகபூர்வ விஐயம் மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐப்பான் அரசின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மூலம் பெரும்போகத்திற்காக விநியோகிக்கப்படவுள்ள யூரியா உரத்தை வழங்கவே ஜப்பான் தூதுவர் ...

மேலும்..

யாழில் தவறான முடிவெடுத்து ஒருவர் உயிர்மாய்ப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் பகுதியில் ஆணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ததுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தூக்கில் தொங்குவதை அவதானித்த உறவினர்கள், அவரை மீட்டு காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை ...

மேலும்..

யாழில் கடலில் சடலம் மீட்பு

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரை கடற்கரையில் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் நேற்று (09) மீட்கப்பட்டுள்ளது. கெருடாவில் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய கந்தசாமி சிவராசா என்ற முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!  நாமல் எச்சரிக்கை

தனது திருமண விருந்துக்கான மின்சாரக் கட்டணத்தில் மில்லியன் கணக்கான ரூபா நிலுவையில் வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும் மின்சாரக் கட்டணம் தொடர்பில் எழுத்துபூர்வமாக ...

மேலும்..

வடக்கிற்கு அதிகாரங்களை கொடுத்தால் தீர்வு கிட்டுமா? அத்துரலிய ரத்தனதேரர் கேள்வி

வடக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தனதேரர் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சூழல் 50 ...

மேலும்..

 எமது கரங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும்  சாணக்கியன் வலியுறுத்தல்

நாடாளுமன்றில் இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - அமைச்சரவையில் ஒரு தமிழர் ஒருவர் அமைச்சராக அங்கத்துவம் வகித்தாலும் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. இந்தக் காரணத்தாலேயே, தமிழர்கள் அதிகாரப் பரவலாக்கலைக் ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் விபத்து யாழில் இளைஞர் பரிதாப பலி

! வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்  22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முள்ளிக்குளம் மருசுகட்டி மன்னார் பகுதியைச் சேர்ந்த செபமாலை நிரோசன் எனத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குறித்த இளைஞரின் சடலம் மந்திகை ...

மேலும்..

தமிழர் பிரதேசங்களைத் திட்டமிட்டு பௌத்த பிரகடனம் செய்கின்றமை வேதனைக்குரியது! ஆறு.திருமுருகன் வருத்தம்

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ற ...

மேலும்..

பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் முதலீடு செய்க! பெற்றோர்களுக்கு இலங்கையில் சச்சின் அறிவுரை

  பிள்ளைகளுடன் நேரத்தை பெறுமதியாக செலவிடுவதுடன் கல்வி மற்றும் ஊட்டச்சத்தில் பிள்ளைகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் எதிர்காலத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாட்டினது எதிர்காலத்திலும் நாம் முதலீடு செய்கின்றோம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் யுனிசெப்பின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான நல்லெண்ணத் தூதுவருமான சச்சின் ...

மேலும்..

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய   ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கை வருகை!

அமெரிக்க இராஜாங்கத்  திணைக்களத்தின் உலகளாவிய  ஊழல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்  ரிச்சர்ட் நெபிவ் கொழும்பிற்கு விஜயம் செய்துள்ளளார் எனக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அவருடன் வருகை தந்த தூதுக்குழுவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊழல் எதிர்ப்பு ஆய்வாளர் டிலான் ஐகென்ஸ் அடங்குவார். கொழும்பில் தங்கியிருக்கும் ...

மேலும்..

முட்டை விலை 38 ரூபா வரை வரும் வர்த்தக அமைச்சர் நளின் தகவல்!

எதிர்வரும் வாரங்களில் 38 ரூபாவுக்கு சந்தையில் முட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.  நாட்டுக்கு தினமும் தேவைப்படும் முட்டைகளில் 35 வீத குறைபாடு காணப்படுவதாலே வெளிநாடுகளில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

அம்பாறை பிரதேச செயலகங்களில் சிங்கள மொழியில் விண்ணப்பங்கள்! சிரமத்தில் தமிழ் மக்கள்

வெளிநாடுகளில் தொழில்புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு 10ஆயிரம் ரூபா பெறுமதியான பொதி வழங்கல் எனும் தொனிப்பொருளில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் தற்போது தமிழ் பேசும் மக்களுக்கு சிங்கள மொழியிலான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இவ்வாறு சிங்கள மொழியில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்ய ...

மேலும்..