இலங்கை செய்திகள்

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு நீர் பருக்கிய பொலிஸ்! வைரலாகும் காணொளி

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓ.எம்.பி அலுவலகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்டது. இதன்போது, உதவி பொலிஸ் பரிசோதகர் இஷானி சுலோசனா ...

மேலும்..

கதிர்காம யாத்திரிகர்களுக்கு அன்னதானம் வழங்கல் தொடர்பில் மட்டு. மாவட்ட இணைத்தலைவரின் கருத்து அவமதிக்கும் செயல்! மாநகரசபை முன்னாள் முதல்வர்  தி.சரவணபவன் காட்டம்

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் தெரிவித்த கருத்தானது ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்து என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கதிர்காம யாத்திரிகர்கள் செல்லும் வழியில் அன்னதானம் வழங்கும் விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த ...

மேலும்..

திருகோணமலை கிண்ணியா விபுலாநந்த பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா விபுலாநந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ( 56)பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன 08/07/2023 இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் திரு.செ. சத்தியசீலன் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் ...

மேலும்..

மதத்தின் பெயரினால் சில்மிசம் மதத்தை அவமதிக்கும் செயல்! கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி காட்டம்

  பௌத்த மதகுரு ஒருவர் இரண்டு பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு மக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். மதத்தின் பெயரால் மதகுரு என்று அனைவரும் வணங்கும் இவர்கள் இவ்வாறான அற்ப சிறிய விடயங்களில் தம்மை ஆட்படுத்துவது கண்டிக்கப்படத்தக்க ஒன்றாகும். - இவ்வாறு தெரிவித்தார் பிரபல சமூக சேவையாளர் ...

மேலும்..

தகாத உறவில் இருந்த பிக்குவை நையப்புடைத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்..T

நவகமுவ பிரதேசத்தில் பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் ...

மேலும்..

தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த தேரர் விவகாரம்! பெண்களை படமெடுத்தது தொடர்பில் வெடிக்கும் சர்ச்சை..T

இலங்கையில் அகப்பட்ட சுமன தேரர் சம்பவத்தில் தொடர்புற்ற அந்த பெண்களை படமெடுத்து, தாக்கியமை குற்றமாகும். பாலியல் சுதந்திரம் என்பது பலாத்காரம் இல்லாத சுயவிருப்ப தனிப்பட்ட விவகாரம். ஆகவே பெண்கள் மீதான தாக்குதல் பிழையானதாகும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற ...

மேலும்..

புதிய விமானப்படைத் தளபதி உதேனி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விமானப்படைத் தளபதி எயார்மார்ஷல் உதேனி ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில்  இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சிக்கு விஜயம் செய்த விமானப்படைத் தளபதியை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றதுடன், முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய விடயங்கள் ...

மேலும்..

ஜெரோம் பெர்னாண்டோ இங்கிலாந்துக்கு பயணம்!

மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு சென்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஜெரோம் பெர்னாண்டோவின் இன்ஸ்டாகிராம் ...

மேலும்..

போதைப்பொருள் தடுப்பில் அரசாங்கம் தீவிர ஈடுபாடு! பிரதமர் தினேஸ் கூறுகிறார்

சர்வதேச கடலில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தியாவுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த ...

மேலும்..

இலங்கைக்குரிய தொல்பொருள்களை திருப்பி அனுப்புகின்றது நெதர்லாந்து!

இலங்கைக்குரிய 6 தொல்பொருள்கள் நெதர்லாந்திலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவுள்ளன என  புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் முடிவடைந்த ஒரு கூட்டு சர்வதேச ஆதார ஆராய்ச்சியின் போது நெதர்லாந்தில் சேகரிப்பில் இருந்த ஆறு தொல்பொருள்கள் ...

மேலும்..

சிறுநீரக நோயாளர், அங்கவீனர், முதியோர் கொடுப்பனவுகள் மாற்றமின்றி வழங்கப்படும்!  ஷெஹான் சேமசிங்க உத்தரவாதம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு , அங்கவீனமுற்றோருக்கான கொடுப்பனவு மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு என்பவற்றைப் பெறும் பயனாளர்களுக்காக புதிய அளவுகோள்கள் அறிமுகப்படுத்தப்படும் வரை , இதுவரை வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி ...

மேலும்..

பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மைக்கு உள்ளகக் கடன்மறுசீரமைப்பு அவசியம்! மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்

பொதுக்கடன்களின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு உள்ளகக் கடன்மறுசீரமைப்பு அவசியம் என்ற உண்மை நிரூபணமானதாலேயே அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் கடந்த வாரம் முன்மொழியப்பட்டுள்ள உள்ளகக் கடன்மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையிலேயே ...

மேலும்..

நிதி வங்குரோத்து நிலை தொடர்பான தெரிவுக்குழு: பஷில், கப்ராலை  உறுப்பினர்களாக  நியமியுங்கள்! ஹர்ஷன ராஜகருண சபாநாயகருக்கு ஆலோசனை

நிதி வங்குரோத்து நிலை தொடர்பில் ஆராய்வதற்கு பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழு தொடர்பில் மக்கள் மத்தியில் கடும் விமர்சனம் காணப்படுகிறது. தெரிவு குழு நியமனத்தில் இடம்பெற்றுள்ள தவறை திருத்திக் கொள்ளுங்கள் அல்லது பஷில் ராஜபக்ஷ, ...

மேலும்..

மயக்க மருந்தால் தொடரும் மரணங்கள் வைத்தியர் ரவிகுமுதேஸ் குற்றச்சாட்டு

கொழும்பு தேசிய கண்வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்ட நோயாளியொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள சுகதாரதொழில்சார்வல்லுனர்கள் சங்கம்  இந்த உயிரிழப்பிற்கு சத்திரகிசிச்சைக்கு முன்னர் கொடுக்கப்பட்ட மயக்கமருந்து காரணமா என கேள்வி எழுப்பியுள்ளது. இந்த உயிரிழப்பிற்கு காரணம் புரோபோபொல் என்ற நரம்புமயக்கமருந்தா என விசாரணை ...

மேலும்..

சீனர்களுக்கு கடலட்டை பண்ணை அனுமதி மைத்திரிபால காலத்திலே வழங்கப்பட்டது! ஈ.பி.டி.பி. ரங்கன் சாடல்

மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்திலேயே சீனர்களுக்கு கடலட்டை பண்ணைக்கான அனுமதி வழங்கப்பட்டது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் - அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை ...

மேலும்..