இலங்கை செய்திகள்

டயகம நகரில் மதுபானசாலை சிறுவர்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா - டயகம நகரில் புதிதாக மதுபானசாலை திறக்கப்படவுள்ளமையை எதிர்த்தும், அவ்வாறு திறப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டயகம நகரைச் சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று ஞாயிற்றுக்கிழமை டயகம நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டயகம நகரில் ஏற்கெனவே மூன்று மதுபானசாலைகள் உள்ள நிலையில், ...

மேலும்..

தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்ள அங்கத்தவர்களில் பெரும்பான்மையினர் விருப்பத்தை பெறுவது கட்டாயமாகும்!

தொழிற்சங்க போராட்டம் மேற்கொள்ள அங்கத்தவர்களில் பெரும்பான்மையினர் விருப்பத்தை பெறுவது கட்டாயமாகும்! அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறுகிறார் திருத்தப்பட்ட புதிய தொழில் சட்டம் ஊடாக தொழில் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 பேர் வரை அதிகரித்திருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ...

மேலும்..

புகழ் பெற்ற எழுத்தாளர் சிவ . தணிகாசலத்தின் “செவாலியார் இளவாலை அமுது” நூல் வெளியீட்டு.

பிரித்தானியாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சிவ . தணிகாசலம் எழுதிய "செவாலியார் இளவாலை அமுது" நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இணுவில் பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் தேவராஜா ...

மேலும்..

பேருந்துவொன்று மன்னம்பிட்டி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்து பாரிய விபத்து, இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்!!!

கதுருவலயிலிருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மன்னம்பிட்டி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாக்கியுள்ளது. சேத விபரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை ! News update..... பொலன்னறுவை – மனம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேருக்கு காயம் ...

மேலும்..

டொலருக்கு அடிமையானவர்களே ராஜபக்ஷர்களை விமர்சிக்கிறார்கள்!  சாகர காரியவசம் சாடல்

டொலருக்கு அடிமையானவர்களே ராஜபக்ஷர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள். இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஹிங்குராகொட பகுதியில்  இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் ...

மேலும்..

தேசியக் கடன் மறுசீரமைப்பில் செல்வந்தர்களுக்கு நிவாரணம்!  சம்பிக்க குற்றச்சாட்டு

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதான நிலை செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தில் கை வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார மீட்சிக்கு சிறந்த திட்டங்கள் ஏதும் அமுல்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மஹரக பகுதியில் இடம்பெற்ற ...

மேலும்..

இந்தியா எங்களை காப்பாற்றியது ; இரத்தக் களறியையும் தடுத்தது!  சபாநாயகர் நன்றி பாராட்டு

இந்தியா எங்களை காப்பாற்றியது இரத்தக்களறியை தடுத்தது என இலங்கையின் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார். கடந்தவருடம் இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை இலங்கையை காப்பாற்றியமைக்காகவும் இரத்தக்களறியை தவிர்த்தமைக்காகவும் இலங்கையின் நம்பகதன்மை மிக்க நண்பனான இந்தியாவிற்கு தனது நன்றியை தெரிவித்துள்ள ...

மேலும்..

இலங்கைக்கு அரசியல் பாடம் எடுக்க சீனா ஆர்வம்: ருவண் விஜேவர்தனவை சந்தித்து கலந்துரையாடல்!

இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படும் இளயவர்களுக்கு அரசியல் குறித்து பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா தீர்மானித்துள்ளது.  காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவண் விஜேவர்தனவை சந்தித்த சீன வெளிவிவகார திணைக்களத்தின் உயர் மட்ட குழுவினர் இலங்கையின் இளம் அரசியல் தலைவர்களுக்கு பயிற்சிகளை ...

மேலும்..

கலவான – இரத்தினபுரி வீதி விபத்தில் 5 சிறுவர்கள் காயம்!

கலவான – இரத்தினபுரி வீதியில் கஹரங்கல பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற வாகன விபத்தில் 5 சிறுவர்கள் காயமடைந்து கலவான ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர். கலவான, ஹகரங்கல பிரதேசத்தில் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த 5 சிறுவர்களே  இவ்வாறு ...

மேலும்..

சச்சுரினை பராமரித்த இலங்கை பாகனுக்கு தாய்லாந்தின் அரச குடும்பத்தால் கௌரவம்!

இலங்கையை சேர்ந்த யானைப் பாகனை தாய்லாந்தின் அரசகுடும்பம் கௌரவித்துள்ளது. சக்சுரின் யானையை பராமரித்த இலங்கையின் யானைப் பாகனை தாய்லாந்தின் மன்னரும் மகாராணியும் பரிசில்களை வழங்கி கௌரவித்துள்ளனர். தெஹிவளை மிருகக்காட்சிசாலையை  சேர்ந்த டொன் உபுல் ஜயரட்ண தெனெல்பிட்டியகேவிற்கு தாய்லாந்தில் இடம்பெற்ற நிகழ்வில் மன்னரின் பிரதி அந்தரங்க ...

மேலும்..

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு ஆளுநர் தயாரா? சபா குகதாஸ் கேள்வி

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர்கள் வடக்கு அல்ல, தமிழர் தாயகத்தை தாண்டியும் முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என வடக்கு மாகாண சபை ...

மேலும்..

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலக பதவிகளுக்கு விண்ணப்பம் கோரல்! துன்புறுத்தும் செயல் என்கிறார் அம்பிகா

உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் தமக்குத் தேவையில்லை என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் கூறிவரும் நிலையில், உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தின் முக்கிய பதவிகளுக்கு அரசாங்கத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமையானது வளங்களை வீணடிக்கின்ற, பாதிக்கப்பட்ட மக்களை துன்புறுத்துகின்ற செயல் என்று ...

மேலும்..

வவுனியாவை வனாந்தரமாக்கவல்ல சீனி தொழிற்சாலை திட்டத்தை கைவிடுங்கள்! ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்

வவுனியாவில் கரும்புப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும், சீனித்தொழிற்சாலையை அமைப்பதற்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளமைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி ஜனாதிபதியும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், எனவே ஒருகாலத்தில் வவுனியா ...

மேலும்..

மனித புதைகுழி விவகாரம் புலிகளை சாடினால் கருணா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! போட்டுத் தாக்குகிறார் கஜேந்திரகுமார்

மனிதப் புதைகுழிகள் தோண்டப்படும் போது வெளிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயிலிருந்து பல மனித ...

மேலும்..

நாட்டின் சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும்! சாகல ரத்னாயக்க வலியுறுத்து

சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணும் நோக்கில், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, மருந்துகளின் தரம் மற்றும் கொள்வனவு செயற்பாட்டில் உள்ள சவால்கள் தொடர்பில் ...

மேலும்..