December 11, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோவிட் -19 தடுப்பூசிகளின் விநியோகம்…

கோவிட் -19 தடுப்பூசி விநியோக பணிக்குழுவில் ஒன்பது உறுப்பினர்களை நியமிப்பதாக ஒன்ராறியோ அரசு அறிவித்துள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் கனடிய பாதுகாப்புப் படைத் தலைவரான ஜெனரல் ரிக் ஹில்லியர் தலைமையிலான இப்பணிக்குழு, கோவிட் -19 தடுப்பூசிகளின் விநியோகம், பராமரிப்பு மற்றும் பகிர்ந்தளிப்பு போன்ற செயற்பாடுகளை மேற்பார்வையிடும். மேற்படி பணிக்குழு, தொழிற்பாடுகள் மற்றும் உபகரணங்கள், மத்திய, மானில மற்றும் பூர்வீககுடிகள் தொடர்பான உறவுகள், சுகாதாரம், நோய்த்தடுப்பு, தகவல் தொழிநுட்பம், தரவுகள் போன்றவற்றுக்கான நிபுணத்துவ நெறிமுறைகளை அரசுக்கு வழங்குவதற்கு அமைச்சகங்களுடன் இணைந்து செயற்படும். இப்பணிக்குழு பல முக்கிய துறைகளில் கவனம் செலுத்துவதுடன், குறிப்பாக விநியோகம், உபகரணங்கள் தொடர்பான நிர்வாகம், மருத்துவ ரீதியிலான வழிகாட்டுதல், பொதுமக்களுக்கான அறிவூட்டுதல் மற்றும் அது தொடர்பான மேம்படுத்தல் போன்றவற்றில் உடனடியாகவே செயற்பட ஆரம்பிக்கும். இன்று காலை, ஜெனரல் ஹில்லியர் அவர்கள் முதல் 100,000 தடுப்பூசி விநியோகம் குறித்த பயிற்சியை வெற்றிகரமாக நடத்தினார். இப்பணிக்குழு தடுப்பூசி பெறுவதற்கான முன்னுரிமையைப் பெறும் மக்களைப் பற்றி விவாதிப்பதற்கான அதன் ஆரம்பக் கூட்டத்தை இன்று மதியம் 1 மணிக்கு நடத்துகிறது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஃபோர்ட் அவர்கள் பங்கேற்பதால், இன்று பிற்பகல் பத்திரிகையாளர் சந்திப்பை அவர் நடத்த மாட்டார். விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் ஸ்காபரோ - றூஜ் பார்க்

மேலும்..

எமது மீனவர்களுக்கும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையில் சண்டை மூழுவதையே இலங்கை கடற்படை விரும்புன்றது – ரவிகரன்…

இலங்கை மீனவர்களுக்கும், தமிழ் நாட்டுமீனவர்களுக்கும் இடையில் சண்டை ஏற்படுத்துவதே, இலங்கைக் கடற்படையின் எண்ணமாக இருக்கின்றது. அவ்வாறு இரு தரப்பு மீனவர்களும் நேரடியாக மோதுவதன் மூலம் எமக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையில் இருக்கும் நல்லுறவை உடைக்க முடியும் என அவர்கள் எண்ணுகின்றார்கள். அதனாலேயே எல்லை ...

மேலும்..

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாள் நிகழ்வு பாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனையில்…

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாள் நிகழ்வு பாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கல்முனையில் ஓய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம் தலைமையில் (11) நடைபெற்ற இந்நிகழ்வில்  ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் தமிழ்மணி கண.வரதராஜன், இந்துசமய ஆசிரிய ஆலோசகர் எம்.லக்குணம், கவிஞர் கே.கிலசன், ...

மேலும்..

உள்ளுராட்சி அதிகாரத்தில் தேவையற்ற தலையீடே தவிசாளர் விளம்பரப் பதாகையை அகற்றக்காரணம் – பாரளுமன்றில் சித்தார்த்தன் எம்.பி

உள்ளுராட்சி மன்ற விடயங்களில் மத்திய அரசு தேவையற்ற தலையீட்டைக்கொள்ளக்கூடாது. இவ்விடயங்கள் பிரதமரின் விடயத்திற்குள் வருவதால் இவ்விடயத்தினை இந்தஇடத்தில் முன்வைக்கின்றேன் என பாராளுமன்றில் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார். நிதி அமைச்சு மீதான விவாதத்தில் நேற்று வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர மட்டக்களப்பிற்கு விஜயம்….

பற்றிக், கைத்தறி மற்றும் உள்ளுர் அடை வடிவமைப்பு இராஜாங்க அமைச்சர் தயாஸ்ரீ ஜயசேகர மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கைத்தறி மற்றும் உள்ளுர் ஆடை வடிவமைப்பு உற்பத்தி தொடர்பான விடயங்களை கண்கானிக்க விஜயம் ஒன்றை இன்று (11) மேற்கொண்டார். இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக மாவட்ட ...

மேலும்..

கல்முனை ரொட்டறிக்கழகத்தினால் நூல் தொகுதி நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு வழங்கல்

அமெரிக்க ரோட்டறிக்கழகத்தினால் இலங்கை ரோட்டறிக்கழகம் ஊடாக கப்பலில் ஒன்றின்  மூலம் புத்தகம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது கல்முனை ரோட்டறிக்கழகம் மூலம் பிரதேச செயலகங்களுக்கு கீழ் உள்ள நூலகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இச்செயற்திட்டத்திற்கு அமைய நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு ...

மேலும்..

அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் திடீர் தீ..

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் 10.12.2020 அன்று இரவு 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. இந்த இரு வீடுகளிலும் இருந்த 07 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க ...

மேலும்..

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் – தவிசாளர்

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது என்று வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபையின் ...

மேலும்..

மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு பிரதமர் அறிவுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (11) தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும்   பிரதமருக்கும் இடையே இன்று முற்பகல் விஜேராமவிலுள்ள  ...

மேலும்..

கிழக்கில் கொரோனா வைரஸினால் முதலாவது மரணம் பதிவு !

அம்பாறை மாவட்டம் -கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சம்மாந்துறையை பகுதியை சேர்ந்த நபரொருவர்  கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்ட நிலையில்  குறித்த தொற்றாளரை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு IDH வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய ...

மேலும்..

(வீடியோ )சுவ தரணி” என்பது இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பானமாகும் – நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் நக்பர்

"சுவ தரணி" என்பது இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான பானமாகும் - நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே. எல். எம். நக்பர்...   https://youtu.be/i-OokPj82Xk    

மேலும்..

தேனீக்களால் முழுவதுமாக உடலை மூடி இளைஞர் கின்னஸ் சாதனை..!

சீனாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தேனிக்களால் தனது உடலை மூடி சாதனை படைத்துள்ளார். ஜியான்க்சி மாகாணத்தை சேர்ந்த Ruan Liangming என்பவரின் தலைமீது வாளிகளில் தேனிக்கள் கொட்டப்பட்டன. உடல் முழுவதும் இவ்வாறு கொட்டப்பட்ட தேனீக்களின் எடை 140பவுண்டுகளாகும். அவரது இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் ...

மேலும்..

கிராமப்புற விளையாட்டு மைதானங்களை புனரமைப்பு செய்தல் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான விளையாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 8264 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் கிராம மட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தி விளையாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது…

வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' செயல்திட்டத்தின் ஊடாக கிராமப்புற விளையாட்டு மைதான புனரமைப்பு மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான விளையாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் எதிர்வரும் ஆண்டுக்குள் கிராம மட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த முடியும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண ...

மேலும்..