May 18, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைதீவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தேல் அனுஷ்டிப்பு!

https://www.youtube.com/watch?v=geF_Ze6XS5k   முள்ளிவாய்க்கால் நினைவேந்தேல் நிகழ்வுகள் காரைதீவில் பிரதேச சபையின் தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் இன்று (18) இடம்பெற்றது . கொரோனா தொற்று உள்ள நிலையில் சுகாதகர நடைமுறைகளை பின்பற்றி இவ் நிகழ்வு இடம்பெற்றது இதன் போது இங்கு உரையாற்றிய பிரதேச சபையின் தவிசாளர் அன்று ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் 1,000 தை தொடும் நிலையில் கொரோனா தொற்று உயர்வு !

(வி.சுகிர்தகுமார்) கொரோனாவின் 3ஆவது அலையின் பின்னர் தொற்றாளர்களின் எண்ணிக்கை கிழக்கு மாகாணத்தில் 3,000ஐ அண்மித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் 1,000 தை தொடும் நிலையில் உயர்வடைந்துள்ளமை கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் புள்ளி விவரத் தகவல்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் ...

மேலும்..

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் விசேட வைத்தியர் சாமிந்த மாதொட இதனை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்தார். தடுப்பூசிகள் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கும் ...

மேலும்..

 ஒட்சிசன் தேவைகளை எடுத்துக்கூறினால் நான் இனவாதியா என சாணக்கியன் சபையில் ஆதங்கம்!

மக்களின் மருத்துவ தேவைகளை எடுத்துக்கூறினால் நான் இனவாதியான என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், கிழக்கு ...

மேலும்..

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – இருவர் பலத்த காயம்

(க.கிஷாந்தன்) நுவரெலியா - இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை சூரியகந்தை பகுதியில் 18.05.2021 அன்று அதிகாலை வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அக்கரைப்பற்று பகுதியிலிருந்து அட்டன் பகுதிக்கு சென்ற கார் ஒன்று நுவரெலியா – ...

மேலும்..

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு!

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள தோட்ட காணியில் முட்டி ஒன்றிற்குள் இருந்து கைக்குண்டுகளை பூவரசங்குளம் காவல்துறையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நேற்று (17) மாலை வவுனியா பூவரசங்குளம் செங்கல்படை பகுதியில் உள்ள தனியார் தோட்ட காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் ...

மேலும்..

அரச பணியாளர்களுக்கான முன்கூட்டியே சம்பளம் வழங்க நடவடிக்கை!

அரச பணியாளர்களுக்கான இம்மாத சம்பளத்தை எதிர்வரும் 21ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு பூராகவும் 21ஆம் திகதியிலிருந்து பயணத் தடைகள் விதிக்கப்பட்வுள்ள நிலையில், அரச பணியாளர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்கத் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார். நிதியமைச்சரான ...

மேலும்..

நாடாளுமன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

(சந்திரன் குமணன்) முள்ளிவாய்க்கால்  12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

மேலும்..

வலி கிழக்கு பிரதேச சபையில் உணர்வுபூர்வ அஞ்சலி

  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை ஈகைச் சுடரேற்றப்பட்டு உணர்வு பூர்வமாக இடம்பெற்றன. சுகாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அச் சமயத்தில் பிரசன்னமாகியிருந்த பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பணியாளர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக அனுஸ்டிக்கப்பட்டது. தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் ...

மேலும்..

யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது – பாராளுமன்றத்தில் பிரதமரிடம் சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களும் இறந்தார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் இறந்ததை நினைவுப் படுத்தியிருந்தார். இந்த நிலையில், பிரதமரின் ...

மேலும்..

யாழ் மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாணம் மாநகர சபையிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில் பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

மேலும்..

மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து இன்று (18) காலை முதல் மேலும் சில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மேலும் சில பிரதேசங்கள் இன்று (18) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை ...

மேலும்..

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை அறிவித்தார் சபாநாயகர்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின்  நிலைப்பாட்டை  சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார். இந்த நிலையில், குறித்த சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவைகள் எனவும், ஏனைய சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது எனவும் உயர் ...

மேலும்..

காரைதீவில் கூடிய விசேட சபைஅமர்வு ; பிரேரணை நிறைவேற்றம்!

 (நூருல் ஹுதா உமர்) கடந்த வாரம் நடைபெற்ற காரைதீவு பிரதேச சபையின் 39 வது சபை அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஐந்து உறுப்பினர்கள் ஆதரவாகவும், ஆறு உறுப்பினர்கள் நடுநிலையாகவும், ஒருவர் எதிராகவும் வாக்களித்தமையால் அது தொடர்பில் உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ...

மேலும்..

உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்த சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி!

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். முல்லைத்தீவு நந்திக் கடலோரத்தில் குறித்த நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

மேலும்..

முள்ளிவாய்க்கால் பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் வேலன் சுவாமிகள்

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் சிவகுரு ஆதீன குரு தவத்திரு வேலன் சுவாமிகள் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். வேலன் சுவாமிகளோடு இணைந்து ...

மேலும்..

இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!

இலங்கையின் முக்கிய 3 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், இலங்கைக்கான சீன தூதரக அலுவலகத்தின் இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எனினும் தற்போது ...

மேலும்..

24 மற்றும் 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை நாட்களாக அறிவிப்பு

எதிர்வரும் திங்கள் (24) மற்றும் செவ்வாய் (25) ஆகிய இரு தினங்களும் அரசாங்க விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கி மற்றும் தனியார் துறையினருக்கு இந்த விடுமுறை அமுலில் இருக்காது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

பருத்தித்துறை மீன் சந்தைக்கு பூட்டு

பருத்தித்துறை மீன் சந்தை சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலில் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் மூடப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் கொரோனவால் மரணம்!

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் மரணம் அடைந்துள்ளார். இவர் மூதூர் கிழக்கு சேனையூர் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் குருளைச் சாரணர் பிரிவுக்கு பொறுப்பான உதவி மாவட்ட ஆணையாளரும், இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவஞ்சலி செய்த க.வி.விக்னேஸ்வரன்!

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

இலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனா

இலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரின் சகோதரர் சந்தூஷ் வீரமனும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பாத்தியா ஜயகொடியும் சந்தூஷ் வீரமனும் ...

மேலும்..

தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்) பெருந்தோட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள தோட்ட தொழிற்சாலைகளை கொவிட் சிகிச்சை நிலையங்களாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சரும் இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிவேயே அவர் இதனை கூறினார், அவர் மேலும் தெரிவித்ததாவது, ' ...

மேலும்..

தமிழ்மொழி புறக்கணிப்பினை சுட்டிக்காட்டிய சாணக்கியன் – சீன தூதரகம் உடனடி நடவடிக்கை!

மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு நாட்டில் இயங்கும் ஒரு சீன நிறுவனத்திற்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பெயர் பலகைகள் அமைக்கும் போது நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகள் புறக்கணிப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக அண்மையில் சீன நிறுவனம் ஒன்று அமைத்துள்ள பெயர்பலகையில் ...

மேலும்..