September 15, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாய்ந்தமருது வைத்தியசாலையில் 50 கட்டில்களுடன் கொரோனா சிகிச்சை நிலையம்.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான விடுதிகள் இன்று (15) திறந்து வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் பதில் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.எச்.கே.சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் கலந்து கொண்டு இவ்விடுதிகளை ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலங்களை கொண்டு செல்வதற்கான நிதியுதவி.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் உடலங்களை மின்தகன நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்குரிய நிதியுதவி ரொறன்ரோ மனிதாபிமானத்தின் குரல் அமைப்பின் ஊடாக நேற்றைய தினம் (2021.09.14) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் வழங்கிவைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் மின்தகன மயானம் இல்லாத சூழலில், கொரோனாப் பெருந்தொற்றால் ...

மேலும்..

பட்டதாரி பயிலுனர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் ஏமாற்றாதீர்கள்_இம்ரான் எம்.பி

2020 ம் ஆண்டு பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளை உடன் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார் . கிண்ணியாவில் (14)அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு ...

மேலும்..

அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் ஐ.நா வை இலங்கை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பதையே காட்டுகின்றது… (பாராளுமன்ற உறுப்பினர் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்)

ஐ.நா அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இலங்கையின் ஒரு அமைச்சர் இது போன்ற மிக மோசமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதென்பது, ஐநா மனித உரிமைப் பேரவையை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதையே காட்டுகின்றது. என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ...

மேலும்..

நாட்டுக்கு பெளத்தம் பற்றி வகுப்பெடுக்கும் அரசின் வக்கிர மனசு இதுவா? பதிலளிக்க ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார். – அனுராதபுர சிறைக்குள் ராஜாங்க அமைச்சரின் நடத்தை பற்றி மனோ கணேசன்

நாட்டுக்கு பெளத்தம் பற்றி வகுப்பெடுக்கும் அரசின் வக்கிர மனசு இதுவா? பதிலளிக்க ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளார்.   அனுராதபுர சிறைக்குள் ராஜாங்க அமைச்சரின் நடத்தை பற்றி மனோ கணேசன் ஒரு ராஜாங்க அமைச்சர் அனுராதபுர சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் கைதிகளை முழந்தாளிட செய்து அவமானப்படுத்தி, பயமுறுத்தி உள்ளார். இதொரு பாரிய மனித உரிமை மீறல், மனிதர்களின் ஆத்ம ...

மேலும்..

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் இரண்டாம் கட்ட இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் இரண்டாம் கட்ட இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (14) பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் ...

மேலும்..

இன்னும் தூரப்பட முடியாத கனவுகள்!

அன்றொரு வெள்ளிக்கிழமை இதே தினத்தில் 2007ஆம் ஆண்டில் மிகுந்த சோகத்துடன் விடிந்த சம்மாந்துறை என்றும் காணாத கலவரத்தினை அடைந்திருந்தது. எல்லோர் முகத்திலும் சோகம் அப்பியிருந்தது. வரலாறு காணாத சனக்கூட்டம் நகர மண்டபத்தை சூழ்ந்திருந்தது. தங்களை அறியாமலேயே மக்கள் வரிசையாக நிற்கத் தொடங்கினர். ...

மேலும்..