நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் இரண்டாம் கட்ட இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் இரண்டாம் கட்ட இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (14) பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பின் தலைவர் ஐ எம் நிஸ்மி தலைமையில் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ எம் அப்துல் லத்தீப் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டு மின் இணைப்புக்கான பணம் செலுத்தியமைக்கான உறுதிச் சீட்டுக்களை வழங்கி வைத்தார்

இந்த நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சரீப், நிர்வாக உத்தியோகத்தர் ஏ எல் பைரூஸ் , பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் செயலாளர் ஏ புஹாது, உப தலைவர் ஏ ஜி சித்தீக் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மின் இணைப்புக்கான கொடுப்பனவு செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டு மற்றும்  உலர் உணவு பொதிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்