September 29, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு கௌரவ பிரதமர் அறிவுறுத்தல்…

அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் ...

மேலும்..

எஸ்.எம். சபீஸின் “அயலவருக்கு உதவுவோம்” திட்டம் : பொதுமுடக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு !

"அயலவருக்கு உதவுவோம்" திட்டத்தின் கீழ் பொதுமுடக்கத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கான நிவாரணப்பொதி வழங்கும் நிகழ்வு அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று (29) இடம்பெற்றது. அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினரும் அக்கரைப்பற்று ஜும்மாப்பள்ளிவாசல் தலைவருமான எஸ்.எம்.சபீஸின் ...

மேலும்..

தலைவர் ரவுப் ஹக்கீமின் மனதில் மாற்றம் தெரிகிறது. பிடிவாதம் களைந்து அடுத்தகட்ட முஸ்லிம்தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று (28.09.2021) இரு சிறுபான்மை பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினர். இவ்வாறு இடம்பெறுவது இது முதல் முறையல்ல. வரலாற்றில் பல நூறு சந்திப்புக்கள் இடம்பெற்றதனை அறிந்திருக்கின்றோம். இவ்வாறான சந்திப்புக்களில் முஸ்லிம்கள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ...

மேலும்..

பிரித்தானியாவில் இயங்கும் கொஸ்மோ அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு…

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) பிரித்தானியா இலங்கை முஸ்லிம் இயக்கங்களின் (கொஸ்மோவின் புதிய நிர்வாகிகள்) பிரித்தானியாவில் உள்ள இலங்கை முஸ்லிம் இயக்கங்களின் ஒன்றிணைந்த அமைப்பான கொஸ்மோவின்  வருடாந்த மாநாடு அண்மையில் லண்டன் ஹரோவில் உள்ள இலங்கை முஸ்லிம் கலாசார நிலையத்தில் ZOOM தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொஸ்மோ ...

மேலும்..

கிண்ணியாவில் பல பிரதேசங்களில் இலவச குடிநீர் இணைப்புகள் வழங்கி வைப்பு…

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீனினால் 300 இலவச குடிநீருக்கான இணைப்பை பெறுவதற்கான கட்டண ரிசீட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிண்ணியாவில் குறிஞ்சாக்கேணி, பூவரசந்தீவு, சூரங்கள் மற்றும் வான்எல ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றன. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் ...

மேலும்..

தெருவோர குப்பைகளை கட்டுப்படுத்த கல்முனை மாநகரில் புதிய நடவடிக்கை அறிமுகமாகிறது !

கல்முனை மாநகரில் அதிகரித்து வரும் திண்மைக்கழிவகற்றல் நடவடிக்கையை மேம்படுத்தி மாநகர மக்களுக்கு ஒழுங்கான சேவையான வழங்கும் நோக்கில் அன்றாட கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக மாலை வேளைகளில் அவசர கழிவுகளாக துர்நாற்றம் வீசக்கூடிய , வீட்டில் வைத்துக்கொள்ள முடியாத கழிவுகளை அகற்றும் விசேட ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி தேசிய வைத்தியசாலையினால் வேலைதிட்டங்கள் முன்னெடுப்பு

மத்திய அரசின் நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தலைமையிலான வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலணியினரால் நாட்டில் கடுமையாக உச்சம் தொட்டிருக்கும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் அம்பாறை மாவட்டம் ...

மேலும்..

காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு பிச்சை போடுகிறதா காவிரிமேலாண்மை ஆணையம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

இந்திய அரசு நீராற்றல் துறையின் முழுநேரத் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவராகவும் உள்ள எஸ்.கே. ஹல்தார் தலைமையில் 27.09.2021 அன்று டெல்லியில் காவிரி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. பதினான்காவது முறையாக நடந்த இக்கூட்டத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ...

மேலும்..

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் நியமனத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு!

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால், வடமாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு இன்று (29) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் அவரது உறுப்புரிமை நீக்கப்பட்டு, கடந்த 13 ஆம் திகதி ...

மேலும்..

13 பேர் குளவி கொட்டுக்கிழக்காகி வைத்தியசாலையில் அனுமதி…

(க.கிஷாந்தன்) தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே,  குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 29.09.2021 அன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து ...

மேலும்..

தோட்ட சேவையாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தலவாக்கலையில் போராட்டம்…

(க.கிஷாந்தன்) தோட்ட சேவையாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள் இன்று (29.09.2021) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், தலவாக்கலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு நடவடிக்கையிலும் இறங்கினர். எதிர்ப்பு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம், ...

மேலும்..

தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்…

(க.கிஷாந்தன்) போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி 9 தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலவாக்கலை கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் இன்று (29.09.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்படி தோட்டத்தில் தோட்ட அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் நேற்று முறுகல் நிலைமை ஏற்பட்டது. ...

மேலும்..

இந்தியாவிலிருந்து கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நல்லிண கறவைப் பசுக்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த ...

மேலும்..

வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத் தனமாகக் கருத்திடக் கூடாது… (டெலோ செயலாளர் நாயகம் – பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்)

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார். தமிழீழ ...

மேலும்..

மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகள் வேண்டுமென்றே தாமப்படுத்தப்பட்டதா?

மத்திய அதிவேக நெடுஞ்சாலை  பணிகள் வேண்டுமென்றே தாமப்படுத்தப்பட்டதா? கடந்த  அரசாங்கத்தில்  நடந்த முறைகேடுகளை ஆராயுமாறு  நெடுஞ்சாலை  அமைச்சர்  ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் வீதி  அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை கடந்த  நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு  வீதி அபிவிருத்தி அதிகாரசபை  அதிகாரிகள் ...

மேலும்..

யானை மற்றும் மனித மோதலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்- இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க

அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கான தீர்வு விரைவில் பெற்றுக் கொடுக்கபடும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார் . இதற்கமைய அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் ...

மேலும்..

மறைந்த உறுப்பினரின் பெயரில் வீதி…

திருகோணமலை நகராட்சி மன்றத்தின் உறுப்பினராக இருந்து மறைந்த  அமரர் ச.சனூன் அவர்களின் பெயரில் சோனகவாடி வட்டாரத்தில் உள்ள வீதிக்கு பெயர் சூட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருகோணமலை நகராட்சி மன்றத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக சோனகவாடி வட்டாரத்திற்கு தெரிவாகி செயற்பட்டு வந்த ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் 300 இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச இணைப்புக்கள் வழங்கி வைப்பு…

திருகோணமலை மாவட்டத்தில் 300 இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இலவச குநீர் இணைப்புகள் பெறுவதற்கான கட்டணம் கட்டிய பற்றுச்சீட்டுகளும் இணைப்பினை பெறுவதற்கானா ஆவணங்களும் பயனாளிகளுக்கு  வழங்கும் திகழ்வுகள் புல்மோட்டை, இறக்கக்கண்டி, மூதூர், தோப்பூர், ஈச்சலம்பற்று ஆகிய பிரதேசங்களிலும் ...

மேலும்..

இலங்கை மீது இந்தியா அத்துமீறுவதாக தெரிவித்து ஜெனிவாவில் இந்தியாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

இந்தியாவின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக ஜெனிவாவினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக (27) மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு முன்னால் இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்தியா தங்களுடைய ...

மேலும்..