May 25, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பு-15 காக்கைதீவு பகுதியை அழகுபடுத்துவது குறித்து ஆராய்வு!

கொழும்பு-15, மட்டக்குளியில் அமைந்துள்ள காக்கைதீவு பகுதியை அழகுபடுத்துவது குறித்து இன்று வியாழக்கிழமை (25) கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் ஆராய்ந்தனர். குறிப்பாக, காக்கைதீவு பகுதியில் உள்ள கால்வாய்களை புனரமைத்து சுத்தப்படுத்துவது, காக்கைதீவு கடற்கரைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மெருகூட்டுவது தொடர்பாக ...

மேலும்..

பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமாக டிக்கிரி கே. ஜயதிலக நியமனம்

புதிய பதவியணித் தலைமை அதிகாரியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் பதவிக்கு பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகமாகப் பணியாற்றிய டிக்கிரி.கே ஜயதிலக 23ஆம் திகதி முதல் நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார் 2002ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து தனது ...

மேலும்..

தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவுடன் சிறீதரன் எம்.பி. ஆய்வு!

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் சமகால நிலை தொடர்பிலான கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதானிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் புதன்கிழமை நண்பகல் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்தில் ...

மேலும்..

கடற்றொழிலை சர்வதேச நியமங்களுக்கு ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஆராய்வு – ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் டக்ளஸ் சந்திப்பு

சர்வதேச கடற் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் இலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும் ஆழ்கடல் படகுகளின் செயற்பாடுகள் மீன்பிடி தொடர்பான சர்வதேச நடைமுறைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபிஷ் அவர்களுக்கும், கடற்றொழில் அமைச்சர் ...

மேலும்..

வடக்கு – கிழக்கு மீனவர்களுக்கு விரைவில் சீனாவின் மண்ணெண்ணெய் – அமைச்சர் டக்ளஸ்

சீன அரசாங்கத்தினால் கடத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற மண்ணெண்ணை விரைவில் வடக்கு கிழக்கில் உள்ள ஏழு கடை தொழில் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை முழுவதுமான கடற்தொழில் ...

மேலும்..

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது !

மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய  அடக்கம் செய்யப்பட்ட அவரின் பூதவுடலை மீண்டும் தோண்டுவதற்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் வியாழக்கிழமை (25 ) கொழும்பு, பொரளை பொது ...

மேலும்..

வடக்கில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் – அங்கஜனிடம் ஜீவன் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளும் நிச்சயம் வழங்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ...

மேலும்..

குருந்தூர்மலையில் ரவிகரன், மயூரன் கைது வழக்கு ஒக்ரோபர் 19 இற்கு ஒத்திவைப்பு!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 2022.06.12 அன்று  இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டு தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக  தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்டசெயலாளருமான துரைராசா ரவிகரன் ...

மேலும்..

முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரல் ஒன்று ஓய்ந்து போனது திறமை கொண்ட சமூகப்பற்றுள்ள முஸ்லிம் தலைவரே ஹமீட்! சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அஞ்சலி

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொதுச்செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் காலமானதாக இன்று காலை வந்த செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்). இந்த செய்தியானது எங்களுக்கு மட்டுமல்ல இலங்கை முஸ்லிங்களுக்கே கவலையான செய்தியாக நான் ...

மேலும்..

மனித உரிமை மக்கள் பாதுகாப்பு அமைப்பால் 2023 இல் இரு ஊடகவியலாளர்களுக்கு விருது!

மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பால் வருடாந்தம் நடத்தப்பட்டுவரும் 2023 விருது வழங்கல் விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதன் பிரதித் தலைவர் கலாநிதி எப்.எம்.சரீக் தலைமையில் இடம்பெற்றது. இந்த விழாவுக்கு பிரதம அதிதியாக இந்திய நாட்டைச் சேர்ந்த ஆசிய ...

மேலும்..

அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கு முயற்சி! அளவீட்டு முயற்சி மக்களால் தடுத்து நிறுத்தம்

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் இன்று (வியாழக்கிழமை) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும் கரைதுறைப்பற்று ...

மேலும்..

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தபாலில் வந்த போதைப்பொருள் மீட்பு!

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து கொழும்பு மத்திய தபால் நிலையத்துக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்ட  34.75 மில்லியன் ரூபா பெறுமதியான அமெரிக்க 'குஷ்'  போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்  (சட்ட விவகாரங்கள்) சுதத்த சில்வா நேற்று (புதன்கிழமை)  தெரிவித்தார். பொரலஸ்கமுவ, வெள்ளவத்தை, ...

மேலும்..

சண்முகாவில் ஆசிரியை ஹபாயா அணிய இணக்கம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்க சமிஞ்ஞை!  இம்ரான் எம்.பி. மகிழ்ச்சி தெரிவிப்பு

திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்பட மாட்டாது  என கூறி நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக் கொள்ள விரும்புவதாக சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் தரப்பு நீதிமன்றில் முன்மொழிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக நாடாளுமன்ற ...

மேலும்..

டிஜிற்றல் மயமாக்கப்படுகின்றன இலங்கையின் ரயில் சேவைகள்! அமைச்சர் பந்துல தகவல்

புகையிரத திணைக்களம் கடந்த ஆண்டு மாத்திரம் 10 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. ஊழலற்ற வகையில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டுமாயின் ரயில்வேத் திணைக்களம் அதிகார சபையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். எதிர்வரும் மூன்று மாத காலத்துக்குள் ரயில் சேவைகள் டிஜிற்றல் மயப்படுத்தப்படும் ...

மேலும்..

மின்சார அமைச்சும் சுயாதீன ஆணைக் குழுவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுகின்றமை அவசியம்! அமைச்சர் ஜீவன் வலியுறுத்து

நாடு நெருக்கடியான நிலைமையை எதிர்நோக்கும் போது சில இறுக்கமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டி நேரிடும். இப்போது மட்டுமின்றி நாடு சுதந்திரமடைந்த காலம் தொட்டு அவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. அதனால் மின்சாரம் தொடர்பான அமைச்சும் சுயாதீன ஆணைக்குழுவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது அவசியமாகும் ...

மேலும்..

கனடாவின் நிலைப்பாட்டை வெகுவிரைவில் முழு உலகும் பின்பற்றும் நிலைமை வரும்! சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்வுகூறல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவம் பௌத்தமயமாக்கப்பட்டுள்ளது. மகாவலி வலயத்தில் உள்ள தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் மகாவலி அதிகார சபையின் ஊடாக சிங்களக் குடியேற்றத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுவும் ஒருவகையான இன அழிப்பு செயற்பாடு என்பதை ஆட்சியாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இலங்கை தொடர்பில் ...

மேலும்..

செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் இ.தொ.கா. குழுவினருடன் சந்திப்பு!

செக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் ஹெலிஸ்கா ஷிகோவா இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழுவினருடன் நேற்று (புதன்கிழமை) சிநேகபூர்வ கலந்துரையாடலொன்றை நடத்தினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமியபவனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இ.தொ.கா. தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் ...

மேலும்..