December 3, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் தமிழர்கள் இலங்கையில் கைதாகினர்! அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை

தமிழர்கள் அமைதியான முறையில் மேற்கொண்ட நினைவுகூரலிற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையின் வடக்குகிழக்கில் அவர்கள் கைதுசெய்யப்பட்டமை குறித்தும் தமி;ழ் மக்கள் நினைவுகூரலை முன்னெடுப்பதை தடுப்பதற்கு குழப்புவதற்கு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின்  உறுப்பினர் ...

மேலும்..

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் முன்வருக! ரவூப் ஹக்கீம் சபையில் வலியுறுத்தல்

உலகில் எந்த நாட்டிலும் இடம்பெறாத அளவுக்கு இஸ்ரேல் யுத்தக் குற்றத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகளுக்கு முடியாமல் போயிருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு ...

மேலும்..

தங்கம்கடத்திய எனது கட்சி எம்.பியை மூன்று மாதங்களுக்காவது நிறுத்துக! ரிஷாத் பதியுதீன் கோரிக்கை

நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி தங்கம் கடத்திய எனது கட்சி எம்.பியை 3 மாதங்களுக்காவது நாடாளுமன்றத்தில் இருந்து இடைநிறுத்த வேண்டும். அது தொடர்பில் சட்டமா அதிபர் கொடுக்கின்ற அறிக்கை இந்த 225 எம்.பிக்களையும் திருடர்கள், மோசமானவர்கள் என சொல்கின்ற மக்களை இன்னும் ஆத்திரப்படுத்துவதாக ...

மேலும்..

பலஸ்தீனுக்கு ஆதரவளிக்கும் வகையில் சபைக்கு அந்த நாட்டு சால்வை அணிந்துவந்த எம்.பிக்கள்

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முஸ்லிம் எம்.பிக்கள் இலங்கை பலஸ்தீன் நட்புறவு சால்வை அணிந்து சபைக்கு வந்திருந்தனர். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இதன்பாNது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...

மேலும்..

ஆதிவாசி சமூகத்தையும் நுண்கடன் ஆக்கிரமிப்பு! நீதியமைச்சர் விஜயதாஸ தெரிவிப்பு

நுண்கடன்  திட்டத்தின் கொடுமைகளுக்கு ஆதிவாசி சமூகத்தினரும் தற்போது அகப்பட்டுள்ளார்கள். மத்திய வங்கியால் மாத்திரமே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். நுண்கடன் திட்டங்களைக் கண்காணிக்கும் வகையில் அதிகார சபையை ஸ்தாபிக்கும் சட்டமூலத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் சமர்ப்பிப்பேன் என  நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் ...

மேலும்..

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளையும் பாதுகாப்பவர்களையும் மக்கள் நன்கறிவார்கள்! காவிந்த ஜயவர்தன கூறுகிறார்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, தமது உறவுகள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட எம் மக்கள் இன்றும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, யாருக்காக நடத்தப்பட்டது என்பதையும், தற்போது அவர்களைப் ...

மேலும்..

இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமையைத் தெரிவோம்! தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை கூறுகிறார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு முயற்சிகளை எடுத்துவருவதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் ...

மேலும்..

2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் பதிவு நீதி அமைச்சர் விஜயதாஸ கவலை

நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 2403 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமை கவலைக்குரியது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு ...

மேலும்..

தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2 வீத சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு! பிரசன்ன ரணவீர தெரிவிப்பு

தற்கால தலைமுறையை புதிய உலகிற்கு பொருத்தமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார். வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ...

மேலும்..

மரண தண்டனைக் கைதிகளாக 7 வெளிநாட்டு பிரஜைகள் சிறை! நீதி அமைச்சர் தகவல்

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். 07 வெளிநாட்டுப் பிரஜைகள் மரண தண்டனை கைதிகளாக உள்ளனர் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் ...

மேலும்..

பஷில், கோட்டாபயவின் குடியுரிமையை நீக்க இரு கால்களையும் உயர்த்தி ஆதரவளிப்பேன் டிலான் பெரேரா பகிரங்கம்

பொருளாதாரப் படுகொலையாளிகளை உயர்நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை இரத்து செய்யும் கீழ்த்தரமான யோசனைக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன். ஏனெனில் அவர் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்.பஷில்,கோட்டாபய உட்பட ஏனையோரது குடியுரிமையை  நீக்கும் யோசனைக்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு ...

மேலும்..

‘ஒற்றைத் தந்த’ யானை மீது துப்பாக்கிச் சூடு!

ஒற்றைத் தந்த யானை மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய நாமல் பூங்காவில் சுற்றித் திரிந்த யானையின் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த யானை தொடர்பில் கல்கிரியாகம வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய ...

மேலும்..

புனர்வாழ்வு நிலையங்களில் சிகிச்சை பெறுவோர் தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்கள்

'புனர்வாழ்வளித்தல் தொடர்பான சட்டம் அண்மையில் இயற்றப்பட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 520 பேரும், சேனபுர மத்திய நிலையத்தில் 471 பேரும், வவுனியா மத்திய நிலையத்தில் 93 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்' என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...

மேலும்..