தாழமுக்கத்தினால் யாழில் ஏதாவது அனர்த்தம் ஏற்பட்டால் எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளது- யாழ் மாவட்ட அரச அதிபர்.

யாழ் மாவட்டத்தில் தாழமுக்கத்தினால் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
தற்போது தாழமுக்கம் காரணமாகவிடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின்அறிவுறுத்தல் ஒன்று கிடைத்திருக்கின்றது. இன்று தொடக்கம் 24, 25 ஆம் திகதி வரை அவதானமாக மீனவர்களை கடலுக்குச் செல்லும் படியும் அதே நேரத்தில் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் சற்று உக்கிரமடைந்து புயலாக மாறகூடிய நிலை காணப்படுவதனால் அவதானமாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 24 25 ஆம் திகதிகளில் 100-150 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடும் கடும் காற்று வீசும் எனவும் 24 25 ம் திகதி வடக்கு மாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிக அவதானமாக தங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம்அனர்த்த முகாமைத்துவ பிரிவினுடைய அறிவுறுத்தலையும் வளிமண்டலத்திணைக்களத்தினுடைய அறிவுறுத்தலையும் பின்பற்றி தங்களுடைய கடற் தொழில்செயற்பாடுகளை செயற்படுத்தப்படுத்தல் வேண்டும். கடல் குழப்பமாக இருப்பதனால் குறிப்பாக நெடுந்தீவுக்கான கடல் பயணமும் கடல் குழப்பம்,கடும் காற்றின் காரணமாக தடைப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்படகுப் போக்குவரத்தினை நிலமையினை அனுசரித்து செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.
கிழக்கு கடற் பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் வட பகுதியில் ஏதாவது அனர்த்தம் ஏற்படுமாக இருந்தால் அதனை எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் வடக்கில் கரையோரப் பகுதிகளில் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் அத்தோடு தங்களுடைய பிரதேசத்தில் ஏதாவது இடர்பாடுகளை அர்த்தம் ஏற்படுமாயின் உடனடியாக அனர்த்தமுகாமைத்துவ பிரிவினரை தொடர்பு கொள்வதன் மூலம் அதற்குரிய நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவு முன்னெடுக்கும் என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.