கொழும்பின் முக்கிய கேந்திர மையங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்:அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் அல்லது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்படாவிட்டால், உயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் எந்தவொரு நபரும் வீதி, மைதானம், வேறு திறந்த பிரதேசத்தில் பொதுக் கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்தவோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தகுதியான அதிகாரியாக இருப்பார். அதற்கு அமைய பின்வரும் இடங்கள் உயர் பாதுகாப்பு வலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

*பாராளுமன்ற கட்டடத்தொகுதியை அண்மித்த பிரதேசம்
*உயர் நீதிமன்ற வளாகம்
*மேல் நீதிமன்ற வளாகம்
*கொழும்பு நீதவான் நீதிமன்றம்
*சட்டமா அதிபர் திணைக்களத்தை அண்மித்த பிரதேசம்
*ஜனாதிபதி செயலகம்
*ஜனாதிபதி மாளிகை
*கடற்படை தலைமையகம்
*பொலிஸ் தலைமையகத்தை அண்மித்த பகுதிகள்
*அகுரகொட பாதுகாப்பு அமைச்சு
*இராணுவ தலைமையகம்
*விமானப்படை தலைமையகம்
*பிரதமர் அலுவலகம்
*அலரி மாளிகை
*பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைத்தளபதிகளின் வீடுகள் அமைந்துள்ள பிரதேசங்கள்
என்பன அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.