நகர அபிவிருத்தி அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர்

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களின் பணிகளை நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

குறித்த திட்டங்களின் கீழ், நகர மையத்தில் நிறுவப்பட்டுள்ள சட்டவிரோதமான கட்டிடங்களை அகற்றுதல், புதிய நடைபாதைகளை புனரமைத்தல் அல்லது புதிதாக நிர்மாணித்தல், ஏற்கனவே உள்ள வாகன நிறுத்துமிட அபிவிருத்தி, குப்பைகளை அகற்றுவதற்கு பொருத்தமான திட்டங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் பிற பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கமைய அனைத்து மக்களுக்கும் சமமான நகர வசதிகளை வழங்கி மக்களின் சமூக மற்றும் பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.