இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்திக்க இந்தியாவும் சீனாவும் ஒத்துழைக்க வேண்டும்

இந்தியா, சீனா உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்கள் இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்திக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜப்பான் நிதி அமைச்சர் Shunichi Suzuki தெரிவித்துள்ளார்.

நிபந்தனைகள் முழுமைப்படுத்தப்படும் பட்சத்தில், ஜப்பான் தனது பங்களிப்பை வழங்கும் என அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னரே , ஜப்பான் நிதி அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

தேவையான ஆவணங்களை வழங்கி, வௌிப்படைத்தன்மையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜப்பான் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் ஜப்பான் பிரதமரை சந்தித்திருந்தார்.

அனைத்து கடன் வழங்குநர்களையும் இணைத்துக்கொண்டு, நீதியான மற்றும் வௌிப்படையான கடன் மறுசீரமைப்பை முன்னெடுப்பதன் அவசியம் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.