தொலைத்தொடர்பு கட்டண அதிகரிப்பு குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரல்
தொலைத்தொடர்பு நிறுவனங்களினால் அண்மையில் மீண்டும் அதிகரிக்கப்பட்ட கட்டண அதிகரிப்பு தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற தீர்மானித்துள்ளது.
கட்டண அதிகரிப்பு தொடர்பில் அந்த நிறுவனங்களினால் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட சமர்பணங்களுக்கு அமைய இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கட்டண அதிகரிப்புக்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது.
இதன்படி, குறித்த நிறுவனங்களால் தங்களது சேவை கட்டண அதிகரிப்பு தொடர்பிலான சட்ட பின்னணிகளை தெளிவுப்படுத்தியுள்ளது.
2.5 சதவீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்புக்கமைய கடந்த 5 ஆம் திகதி முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீண்டும் ஒரு முறை தமது கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை