மாவட்ட செயலக நடமாடும் சேவையைக் குழப்பிய கஜன் அணி!!

இந்தியாவிலிருந்து வருகை தந்த மக்களுக்கான நடமாட்டம் சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை யார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் அதனை குழப்பம் வகையில் கஜன் அணியினர் போராட்டம் நடத்தினர்.

இந்தியாவிலிருந்து வட மாகாணம் திரும்பியவர்களுக்கான தேசி அடையாள அட்டை, கடவுச்சீட்டு வழங்கள், பிறப்பு அத்தாச்சி பாத்திரம் பதிவுகள் உட்பட பல சேவைகள் வழங்குவதற்காக வட மாகாணத்தில் இருந்து பலர் வந்திருந்தனர்.

அதே நேரம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவு தொடர்பில் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை ஒன்று நடத்தப்பட இருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்கு செல்லாத கஜன் அணியினர் யாழ் மாவட்ட செயலகத்தின் இடம்பெற்ற இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களுக்கான நடமாடும் சேவையாய் குழப்பும் விதமாக செயற்பட்டமை அங்கு வந்திருந்தவர்கள் மத்தியில் முணுமுணுப்பை ஏற்படுத்தியது.

நடமாடும் சேவைக்காக வாழ்ந்திருந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிர்ப்புக்காட்ட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் எதிர்ப்பை காட்டட்டும் மக்களுக்கு பயன் தரும் நடமாடும் சேவைகளை குழப்ப வேண்டாம் என தெரிவித்தனர்.

இவ்வாறு குழப்பும் பட்சத்தில் தற்போது நாட்டில் இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் தாம் கொழும்பு சென்று சேவையை பெற வேண்டுமானால் சுமார் 50,000 ரூபா வரை செலவழிக்க வேண்டி உள்ளதாகவும் கவலை தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.