பனை அபிவிருத்திச் சபையை நிதி ரீதியாக முன்னேற்ற பங்களிப்புச் செய்யுங்கள்-பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன வேண்டுகோள்.
சாவகச்சேரி நிருபர்
பனை அபிவிருத்திச் சபையை நிதி நிலைமை ரீதியாக நல்ல நிலைக்கு கொண்டு வரவும்,பனை சார்ந்த கைத்தொழிலை மேம்படுத்தவும் அனைவரும் பங்களிக்க வேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட பனை அபிவிருத்திச் சபைக்கான கட்டிட திறப்பு விழா வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
அரசாங்கத்தால் வடக்கில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களை நிறைவேற்ற எனது முழுமையான பங்களிப்பை வழங்குவேன்.வடக்கில் பனங் கைத்தொழில் சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் கிரிஷாந்த பத்திராஜா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் எனக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்.
பனை சார்ந்த உற்பத்திகளுக்கு இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியாக நல்ல மதிப்பு உள்ளது.அந்த வகையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பனை அபிவிருத்திச் சபைக்கான சொந்தக் கட்டடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.குறித்த கட்டடத்தின் மேல் தள பணிகளையும் விரைவில் கட்டி முடிப்போம். என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
கருத்துக்களேதுமில்லை