நாட்டில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் !

நாட்டில் 81 பறவை இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக உயிர் பல்வகைமை செயலகம் தெரிவித்துள்ளது.

2021 சிவப்பு தரவு புத்தகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இந்த தகவல் வெளியாகியுள்ளதாக செயலகத்தின் பணிப்பாளர் பத்மா அபேகோன் தெரிவித்துள்ளார்.

244 வகையான பறவைகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பறவை இனங்களை பாதுகாப்பதில் முழு சமூகமும் பொறுப்பேற்க வேண்டும் என பத்மா அபேகோன் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்