வருமான வரி செலுத்த தவறினாரா போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ?
போதகர் ஜெரோம் பெர்ணாண்டோவின் குளோரியஸ் சேர்ச் வருமான வரி சர்ச்சையில் சிக்குண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போதகர் ஜெரோம் அரசாங்கத்துக்கு வரிகளை செலுத்தினரா என்பதைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளதுடன் தனிப்பட்ட அடையாள அட்டை இலக்கங்கள் மற்றும் ஏனைய விவரங்கள் தங்களிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் குளோரியஸ் சேர்ச்சின் அதிகாரியொருவரிடம் கேள்வி எழுப்பியவேளை அவர் பதில் தருவதாகத் தெரிவித்தபோதிலும் பின்னர் தொடர்புகொள்ளவில்லை என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஜெரோம் பெர்ணாண்டோவின் தேவாலய நிர்வாகத்துக்கு எந்த வரிச்சலுகைகளையும் வழங்கவில்லை என உள்நாட்டு இறைவரித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பௌத்த ஆலயங்கள் அரசாங்கத்தில் மதவழிபாட்டுத்தலங்கள் என பதிவு செய்யப்பட்டால் வரிவிலக்கு அளிக்கப்படுவது வழமை.












கருத்துக்களேதுமில்லை