அஜித்தை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகர் பக்கம் சென்ற போனிகபூர், அடுத்தப்படம் இவருடன் தானா! இயக்குனர்?

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

இப்படத்திற்காக அஜித் கடுமையாக உழைத்து வந்தார், தற்போது கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நின்றது.

இதனால் படத்தின் ரிலிஸ் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாம், அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை இரண்டையும் போனிகபூர் தான் தயாரித்து வருகின்றார்.

இதை தொடர்ந்து இவர் அடுத்து உதயநிதி ஸ்டாலின் பக்கம் திரும்பியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆம், போனிகபூர் அடுத்து உதயநிதியை வைத்து படம் தயாரிக்கவுள்ளாராம், இப்படத்தை அருண்ராஜ் காமராஜ் இயக்க வாய்ப்புக்கள் அதிகம் என்றும் தெரிவித்துள்ள்னர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.