மாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல், சோகத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்துள்ள படம் மாஸ்டர்.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து முடித்துள்ளார்கள்.

தற்போது அனைவரும் காத்து கொண்டிருக்கும் விஷயம் படத்தின் ரிலீஸ் தான். ஆம் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கசப்பான சூழ்நிலை காரணமாக இப்படத்தின் ரீலீஸ் அடுத்த மாதம் அதாவது மே மாதம் வெளிவரும் என சில தகவல்கள் கசிந்திருந்தது.

ஆனால் தற்போது மே மாதமும் இப்படம் வெளிவராது என தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளது. இத்துடன் மாஸ்டர் திரைப்படம் ஜூன் மாதம் தான் வெளிவரும் என சில தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இதனை குறித்து படத்தின் தயாரிப்பாளர் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்