இந்த அறிகுறி இருந்தா நீங்க கர்ப்பம் என்பது உறுதி!

பெண்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் நாள் என்றால் அது கருத்தரித்தலை உறுதி செய்யும் நாள் தான். கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யகூடிய நாள் தான். முதலிலேயே அறிந்து கொண்டுவிட வேண்டும் என்று தான் ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் மாதவிடாய் தள்ளிபோனால் தான் அது கருத்தரிப்பை உறுதி செய்யும் என்று பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால் உடல் இன்னொரு உயிரை சுமக்க தயாராகிவிட்டாலே அதற்கான அறிகுறிகளை வெளிகாண்பிக்க தொடங்கிவிடும். சற்று கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளலாம். மருத்துவரிடம் சென்றால் உரிய பரிசோதனை செய்து உறுதி செய்துவிடலாம் என்றாலும் கூட முன்கூட்டியே நீங்களே அறிந்துகொள்ளலாம். அதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாமா?

​மாதவிடாய் சுழற்சி

முதலில் உங்கள் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மாதவிடாய் சுழற்சி நாள்களில் மாற்றம் இல்லை என்றால் மாதவிடாய்க்கு பின்பு 14 முதல் 17 நாட்கள் வரை சினை முட்டை வெளியாகும் நாள். இந்நாளில் உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

கருத்தரித்தால் கர்ப்பப்பையின் உள்புறத்தில் நஞ்சுக்கொடி ஹெ.சி.ஜீ என்னும் கர்ப்பகால சுரப்பி சுரக்க தொடங்கும். இந்த சுரப்பிதான் இரத்தத்திலும், சிறுநீரிலும் எளிப்படும். இதை கொண்டு தான் கருத்தரித்தலை உறுதி செய்கிறோம். மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த சுழற்சி வராமல் அதை தொடர்ந்து 10 நாட்களுக்குள் அல்லது முந்தைய மாதவிடாய் சுழற்சியிலிருந்து ஏழாம் வாரத்தில் இந்த சுரப்பு அதிகம் சுரக்க தொடங்கும். அப்போது பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்வார்கள் அதனால் தான் மாதவிடாய் காலத்தை சரியாக நினைவில் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

​வாசனை திறன்

வாசனை உணர்திறன் அதிகமாக இருக்கும். பொதுவாக உணவு சமைக்கும் போதும், இலேசாக வெளிப்படும் நறுமணமும் கூட அதிகமாக உணர்வீர்கள். சமையலில் பருப்பு வேகவைக்கும் மணம் கூட சற்று கூடுதலாக வெளிப்படும். சில வாசனைகள் உங்களுக்கு பிடித்தாலும் சில வாசனைகள் உங்களை குமட்டலுக்கும் உள்ளாக்கும்.

ஒரே நாளில் தொடர்ந்து இந்த வாசனை தன்மை இருந்தால் இவை கருத்தரித்ததற்கான அறிகுறிகளில் ஒன்றாகவே சொல்லலாம்.

​சிறுநீர் கழிக்கும் உணர்வு

தினமும் கழிக்கும் சிறுநீர் அளவில் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டாலும் அதுவும் கருத்தரித்தலுக்கான அறிகுறியே. பகல் பொழுது மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அதிகமாக இருக்கும். அதற்கேற்ப சிறுநீரும் அதிகமாக வெளியேறும்.

கர்ப்பக்காலத்தில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அதிகமாக இருக்கும். ஆனால் கருத்தருத்தலை உணர்த்தும் அறிகுறிகளில் இந்த அறிகுறியும் ஒன்று என்பதால் உங்கள் மாதவிடாய் காலத்தை இதனுடன் தொடர்பு கொண்டும் இந்த அறிகுறியை கவனியுங்கள்.

சோர்வு

எப்போதுதான் சோர்வு இல்லாமல் இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு உடல் பலவீனத்தை கொண்டிருக்கிறது. ஆனால் வழக்கத்தை விட அதிகமாக சோர்வு ஆட்கொண்டால் அதற்கு காரணம் கருத்தரித்தல் என்று சொல்லலாம். உடலில் உண்டாகியிருக்கும் புதிய உயிருக்காக ஹார்மோன்களின் செயல்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் இந்த சோர்வு வழக்கத்தை விட சற்று கூடுதலாகவே இருக்கும்.

 

மாதவிடாய் வரக்கூடிய நாள் நெருங்கும் போது இந்த சோர்வு ஆட்கொண்டால் அதிலும் தொடர்ந்து இருந்தால் கருத்தரித்தலுக்கான அறிகுறிதான் என்று சொல்லலாம்.

வெப்பநிலை

வழக்கத்தை விட உடல் வெப்பநிலை சூடாக இருக்கும். உடலில் உண்டாகும் அசெளகரியத்தால் காய்ச்சல் போன்று நினைக்கலாம். அதற்கேற்ப உடல் ஓய்வு கேட்டு கெஞ்சும். இரவு முழுவதும் தூங்கி காலையில் ஓய்வு எடுத்தாலும் கூட காலையில் எழுந்ததும் உங்களை மீண்டும் படுக்கையில் கிடக்க சொல்லும். ஆனால் இவையெல்லாமே காய்ச்சலுக்கான அறிகுறி அல்ல. கருத்தரித்தலுக்கான அறிகுறி தான் என்பதை தொடர்ந்து வரும் நாட்களில் உணர்ந்துகொள்வீர்கள்.

குமட்டல்

மார்னிங் சிக்னஸ் என்று சொல்லகூடிய அதிகாலை சோர்வும் குமட்டலும் உண்டாக கூடும். சாப்பிட்டாலும் வயிறு காலியாக இருந்தாலும் இந்த உணர்வு அப்படியே இருக்கும். சிலருக்கு வாசனையிலும் ஒவ்வாமையை உண்டாக்கி குமட்டல் உணர்வை உண்டாக்கும். காலை முதல் படுக்கையில் விழுவது வரை நாள் ஒன்றுக்கு கருத்தரித்த ஆரம்ப நாளிலேயே 5 முறையாவது இந்த உணர்வு அதிகரிக்கும். பொதுவான இந்த அறிகுறி அனைவருக்குமே உண்டாவதால் எல்லோருக்குமே இதுகருத்தரித்தல் உறுதிக்கான அறிகுறி என்பது தெரியும்.

​பசியும் பசியின்மையும்

நாள் முழுவதும் பசி உணர்வு மிகுந்திருக்கும். அதே நேரம் சாப்பிடவும் முடியாது. பார்க்கும் உணவுகள் தவிர பிற உணவுகள் மீதும் மோகம் அதிகரிக்கும். பிடிக்காத உணவின் மீது ஆசை இருக்கும். பிடித்த உணவின் மீது வெறுப்பு உண்டாகும். இப்படி உணவின் பிடிப்பிலும் ஒரு மாற்றம் உண்டாகும். அதே நேரம் எப்படி சமைத்தாலும் சாப்பிட முடியாது. இந்த அறிகுறிகள் எல்லாமே நீங்கள் கருத்தரித்தலுக்கு உள்ளாகியிருக்கிறீர்கள் என்பதையே உணர்த்தும்.

​வயிற்றில் அசெளரியம்

வயிற்றில் அவ்வபோது ஒருவித வலியை உணர்வீர்கள். இது உங்கள் அசெளகரியத்தை அதிகரிக்க செய்யும். ஏனெனில் கருப்பையில் கரு தங்க ஆரம்பித்ததும் கர்ப்பப்பை விரிய தொடங்கும். இதனால் தான் அவ்வபோது வயிற்றில் ஒருவித வலியை உணர்வீர்கள்.

 

இந்த அறிகுறிகள் கருத்தரித்த அனைவருக்கும் உண்டு. ஆனால் வெகு விரைவிலேயே இந்த அறிகுறிகளை மாதவிடாய் எதிர்பார்க்கும் நாள் முதலே பலருக்கும் வரக்கூடியதுதான். கருத்தரிக்கிறோம் என்பதை உறுதி செய்யும் முன்பு நம் உடல் அறிந்துவிடும். அதை உணர்த்தும் அறிகுறிகளை தான் இங்கு கொடுத்திருக்கிறோம். ஆனால் இந்த அறிகுறிகள் தீவிரமாகும் வரை பலரும் இந்த அறிகுறிகளை கவனிப்பதில்லை. அதே நேரம் இந்த அறிகுறிகளை அறிந்ததும் நீங்களாக முடிவெடுக்கவும் செய்யாமல் மருத்துவரை அணுகி கருவின் ஆரோக்கியத்தையும் தொடர்ந்து பரிசோதனை செய்வதும் மிகவும் முக்கியம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.