முரண்டு பிடிக்கும் விஜய்.. மிரண்டு போன முருகதாஸ்.. ஒரே ஒரு பிரச்சனையால மொத்த மரியாதையும் போச்சு என புலம்பல்

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குனர் முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் பல நடிகர்களுக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் சமீபகாலமாக இவரின் படங்களுக்கு போதிய அளவு வரவேற்பு இல்லாததால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார்.

தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி என தமிழ் சினிமாவே மிரண்ட அளவுக்கு வெற்றியை கொடுத்தவர் தான் ஏ ஆர் முருகதாஸ். ஆனால் சமீபத்தில் வந்த சர்கார், ஸ்பைடர், தர்பார் போன்ற படங்கள் விநியோகஸ்தர்களை திருப்திப்படுத்தவில்லை போல.

இதனால் நஷ்ட ஈடு வழங்கும் படி கூட்டம்கூட்டமாக முருகதாஸ் வீட்டை நோக்கி சென்றது தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சினிமா வட்டாரங்களில் முருகதாஸின் மரியாதை பெருமளவில் குறைந்து விட்டதாம்.

சர்கார் படத்தின் போது பட்ஜெட்டில் எந்தவித பிரச்சனையும் பண்ணாத சன் பிக்சர்ஸ் தற்போது விஜய், முருகதாஸ் மீண்டும் இணையும் தளபதி65 படத்தில் முருகதாஸின் சம்பளத்தை பாதியாக குறைத்து விட்டதாம். 30 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவருக்கு தற்போது 18 கோடி தான் தர முடியும் என கறாராக சொல்லி விட்டார்களாம்.

விஜய்யை வைத்து எப்படியாவது ஹிட் கொடுத்து விடலாம் என அந்த சம்பளத்திற்கு ஒத்துக் கொண்டதாக தெரிகிறது. மேலும் விஜய்யும் துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்களில் முருகதாஸ் இடம் நடந்து கொண்டதை காட்டிலும் தற்போது இணையும் படத்தில் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்கிறாராம்.

120 நாட்கள் மட்டுமே கால்ஷீட் தர முடியும் எனவும், அதற்கு மேல் தன்னிடம் எந்தவித சலுகையும் எதிர்பார்க்க கூடாது என திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம். விஜய் மற்றும் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் ஆகியோரிடம் எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் தன்னை நிரூபித்தாக வேண்டிய ஒரே கட்டாயத்தில் இந்த படத்தை ஒப்புக் கொண்டுள்ளாராம்.

நான் யார் என நிரூபிக்க எனக்கு ஒரு படம் போதும் என சபதம் எடுத்து திரைக்கதையை வலுவாக அமைத்து வருகிறாராம். மேலும் விஜய்க்கு இப்படி ஒரு ஹிட்டு இதுவரை யாரும் கொடுத்திருக்கக் கூடாது என கதையில் கூடுதல் அக்கறை செலுத்தி கவனித்து வருகிறாராம்.

வரணும்.. பழைய முருகதாஸாய் திரும்ப வரணும்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.