பிளான் பண்ணி விஜய்யை பொது இடத்தில் அவமானப்படுத்திய பிரபலங்கள்.. கடைசிவரை விட்டு கொடுக்காத முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவில் தற்போது வேண்டுமானால் விஜய் முன்னணி நடிகராக இருக்கலாம். ஆனால் சினிமாவுக்கு வந்த புதிதில் இந்த மூஞ்சி எல்லாம் காசு கொடுத்து பாக்கணுமா என பிரபல பத்திரிக்கை ஒன்று கழுவி ஊற்றும் அளவுக்கு கேவலப்பட்டவர்.

இன்று அதே பத்திரிகையில் அட்டைப் படத்தில் விஜய்யின் புகைப்படத்தை போடும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இது அனைவருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் ஒரு பொது நிகழ்ச்சியில் மொத்த சினிமா உலகமும் விஜய்யை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திய சம்பவம் இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

திரையுலகினர் கூடி கொண்டாடிய அந்த விழாவில் நடிகர் விஜய்யை அழைத்து வேண்டுமென்றே பின் வரிசையில் ஒரு மூலையில் உட்கார வைத்தனர். கிட்டத்தட்ட 40 படங்கள் நடித்த நடிகரை அப்படி உட்கார வைத்தது மற்ற ரசிகர்களுக்கே சங்கடத்தை வர வைத்திருக்கும்.

அந்த அளவு அனைவரும் ஒன்று சேர்ந்து விஜய்யை கேவலப்படுத்தினார்கள். ஆனால் முன்வரிசையில் அமர்ந்து கொண்டிருந்த விஜய்யின் உயிர் நண்பனான விக்ரம் உடனடியாக எழுந்து வந்து விஜய்யின் பக்கத்தில் அமர்ந்து அவருக்கு ஆறுதலாக இருந்தார்.

ஒரு சமயம் விஜய்யின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து விஜய் சினிமாவை விட்டே விலக வேண்டும் என்றும் அளவுக்கு விமர்சனங்களை வைத்ததே சினிமா உலகினர் அப்படி நடந்துகொள்ள காரணமாம்.

அப்போது பெரிய ஆட்களாக இருந்த அனைவரும் இப்போது சினிமாவில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க கூட லாயக்கு இல்லாத அளவுக்கு காணாமல் போய்விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றும் இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மனதில் ஆறாத வடுவாய் இருந்து வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்