குழந்தைகளிடம் செல்போன் வேண்டாம்! எந்நேரமும் ஆபத்து என மருத்துவர்கள் எச்சரிக்கை மணி !
தொல்லை கொடுக்கிறார்கள் என்பதற்காக குழந்தைகளிடம் செல்போனை கொடுப்பது பின்னாளில் பெரிய ஆபத்துகளை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கிய வேலையில் இருக்கும்போது அவர்களது செல்போனை கேட்டு குழந்தைகள் அடம் பிடிக்கும். அப்படி அடம் பிடிக்கும்போது வேறு வழியின்றி தொல்லையை சமாளிக்க செல்போனை அவர்களிடம் கொடுத்து விட்டு தன்னுடைய வேலையை பார்க்க போய்விடுவார்கள். ஆனால் அப்படி கொடுப்பது குழந்தையை பின்னாளில் பெரிதும் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். காரணம் தனியார் குழந்தைகள் செல்போனில் என்ன பார்க்கிறார்கள் என நமக்குத் தெரியாது.
தொடர்ந்து குழந்தைகள் செல்போனை பார்த்துக் கொண்டிருந்தால் கண்களும், கைகளும் பாதிக்கப்படும் என்பது உடல் சார்ந்தது தான். ஆனால் அதைத்தாண்டி பார்க்கக் கூடிய விஷயங்கள் ஆழ்மனதை பாதிக்கக் கூடியதாக இருக்கும். அது பின்னாளில் குழந்தைகளின் செயல்கள் மன ரீதியான பாதிப்பை உருவாக்கும். எனவே நீங்கள் வேலை செய்யும் போது குழந்தைகளிடம் விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து விளையாடச் சொல்லுங்கள் செல்போனை தயவுசெய்து கொடுக்காதீர்கள். அப்படியே சிறிது நேரம் கொடுத்தாலும் உங்கள் கண்காணிப்பிலேயே வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாட பழக்கப்படுத்துங்கள். இல்லையென்றால் இப்போது எப்படி எவ்வளவு கூட்டம் இருந்தாலும் யாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ளாமல் செல்போனை நோண்டுகிறோமோ, குழந்தைகளும் இனி அப்படித்தான் மற்ற குழந்தைகளிடம் இருந்து விலகி நிற்கும்.
கருத்துக்களேதுமில்லை