கொரோனா வைரசுக்குச் சூட்டிய ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை கைவிடுகிறது அமெரிக்கா!

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறிவிட்டதாலும் அதைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவி வேண்டும் என்பதாலும் ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை விட்டுவிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா, தனக்குத் தேவையான முகக் கவசங்கள் உள்ளிட்ட 50 சதவிகித தனிநபர் பாதுகாப்பு உபகரணங்ளுக்கு சீனாவை நம்பியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவும் அடிக்கடி பயன்படுத்தும் ‘வுஹான்’ வைரஸ் என்ற சொல் அமெரிக்காவின் அகராதியில் இருந்து மறைகிறது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகளுக்கு இடையில் மிகுந்த ஒத்துழைப்பு தேவை என்பதால் சீனாவை குறிவைத்து பேசப்பட்ட குறித்த அடைமொழி கைவிடப்படுகிறது.

இதனிடையே, கொரோனா வைரஸ் குறித்த அனைத்துத் தகவல்களையும் தந்து உதவுமாறு சீனாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்திருந்த போதும், தற்போது அங்கு தொற்று வெகுவாகக் குறைவடைந்து இயல்புநிலை மீண்டும் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.