ஜிவி பிரகாஷ்காக காத்திருக்கும் பத்து படங்கள்..யாருமில்லா காட்டுக்குள்ள நீதான் ராஜா

தமிழ் சினிமாவில் இசையில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் ஜிவி பிரகாஷ், அதையும் தாண்டி தற்போது நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். 2006இல் வெயில் என்ற படத்தில் இசை அமைக்க தொடங்கினார் ஜிவி பிரகாஷ் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.

அதிலிருந்து அவருக்கு அதிர்ஷ்டம் மடி மேல் ஏறி உட்கார்ந்தது என்றே கூறலாம், ஏனென்றால் அடுத்தடுத்து முன்னணி பிரபலங்களின் படத்திற்கு இசையமைத்தார். அவரின் இசை அமைத்து வெற்றிப் படங்களில் அங்காடி தெரு, மதராசபட்டினம், ஆடுகளம், ராஜா ராணி,தெய்வத்திருமகள், தெறி, தலைவா, அசுரன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம் தற்போது வரை பார்த்தால் சூர்யாவின் சூரரைப்போற்று வரை வேட்டையாடி உள்ளார்.

இசையமைப்பாளராக ஒருபுறமிருந்தாலும் நடிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ், பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த நாச்சியார் திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றது. பாலா போன்ற இயக்குனர்கள் படத்தில் நடித்தாலே தமிழ் சினிமாவில் நடிப்பில் அங்கீகாரம் கிடைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பு, இசை, நடனம் என்று அனைத்திலும் பட்டையை கிளப்புவார் என்பதால் வர்த்தகரீதியாக ஒரே சம்பளத்தை கொடுத்து விடலாம் என்பது தயாரிப்பாளரின் கணக்கு. ஆதலால் தற்போது அடுத்தடுத்து படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இவரது வளர்ச்சி தமிழ் சினிமாவில் இடம் பிடித்துவிட்டது ஆச்சர்யம்தான். ஆமாம் இசை மற்றும் ஹீரோ இரண்டுக்கும் சேர்த்து ஓரளவு கம்மியாதான் சம்பளம் வாங்குகிறாராம் இதுவே அவரது வெற்றி முக்கிய பங்கு.

இவர் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படங்களின் வரிசையில் இப்போது பார்க்கலாம் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காத, ஜெயில், 4G, காதலைத் தேடி நித்யானந்தா, காதலிக்க யாரும் இல்லை, பேச்சிலர், டிராப் சிட்டி ஆகியவை அடங்கும் இளம் நடிகர்களுக்கு தலைசுற்றி விட்டதாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்