இலங்கைக்கு ஒருதொகை மருத்துவ உபகரணங்களை வழங்கியது சீனா!

இலங்கைக்கு சீன அரசாங்கம் ஒருதொகை மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது.

இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் இவற்றை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் கையளித்துள்ளார்.

இதன்போது 600 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் உட்பட சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னரும் சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு பல தடவைகள் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்