விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | ரொறன்ரோ நகரமும் பீல் பிராந்தியமும் மூன்றாம் கட்டத்துக்கு நகர்கின்றன…

ஒன்ராறியோ சுகாதார தலைமை அதிகாரியுடன் எமது அரசாங்கம் மேற்கொண்ட ஆலோசனைக்கிணங்க, எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஜூலை 31ஆம் திகதியன்று, ரொறன்ரோ நகரமும் பீல் பிராந்தியமும் மூன்றாம் கட்டத்துக்கு நகர்வதென முடிவெடுக்கப்பட்டுள்து. ஒன்ராறியோ மானிலத்தில் மேலும் பல வணிக மற்றும் பொது இடங்களைத் திறந்து வைக்கும் மேற்படி முடிவானது, இப்பகுதிகளின் சுகாதார தரவுகளின்படி குறைவான நோய்ப்பரம்பல், நோய்த்தொற்றை சமாளிக்க போதியளவு வைத்தியசாலை மற்றும் சுகாதார வசதிகள், அதிகரிக்கப்பட்டுள்ள மருத்துவ சோதனைகள் போன்றவற்றை அடிப்படையாக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீளத் திறந்து வைப்பதன் மூன்றாம் கட்ட விதிமுறைகளின்படி, அடுத்த கட்டத்துக்குள் நகரும் ஒன்ராறியோவின் பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடும்போது கடைப்பிடிக்க வேண்டியவை பின்வருமாறு அமையும்:

  • உள்ளக ஒன்றுகூடல்களின்போதான வரையறை அதிகப்படியாக 50 பேர் வரை அதிகரிக்கப்படுகிறது.
  • வெளியரங்க ஒன்றுகூடல்களின்போதான வரையறை அதிகப்படியாக 100 பேர் வரை அதிகரிக்கப்படுகிறது.
  • ஒன்றுகூடுபவர்களின் எண்ணிக்கை தனிமனித இடைவெளி விதிமுறைக்ளுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்