கல்குடாத் தொகுதியில் அமைதியான முறையில் வாக்களிப்பு…

பாராளுமன்றப் பொதுத் தேர்தல் 2020 இற்கான வாக்களிப்புகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.

இம்மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நான்கு இலட்சத்தி ஒன்பதாயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்;றுள்ளனர். கல்குடாத் தேர்தல் தொகுதியில் 119 வாக்களிப்பு நிலையங்களிலும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 193 வாக்களிப்பு நிலையங்களிலும், பட்டிருப்புத் தொகுதியில் 116 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

அத்தோடு வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதைக் காணக் கூடியதாக உள்ளது. வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார வழிமுறை முழுமையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது.

சுகாதார திணைக்களத்தினர் கோவிட் 19 சுகாதார வழிமுறைகளை பின்பற்றி வாக்களிக்கும் நடைமுறையினை உறுதி செய்து வருகின்றனர். சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதற்கு பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதையும், விசேட நடமாடும் பாதுகாப்பு பிரிவினர் கடமைகளில் ஈடுபட்டு வருவதையும் காணக் கூடியதாக உள்ளது.

இத்தேர்தலில் 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதன்படி மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1 இலட்சத்தி 92 ஆயிரத்தி 809 வாக்காளர்களும், கல்குடாத் தொகுதியில் 1 இலட்சத்தி 19 ஆயிரத்தி 928 வாக்காளர்களும், பட்டிருப்புத் தொகுதியில் 97 ஆயிரத்தி 71 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 65,321 வாக்காளர்களும், காத்தான்குடி பிரிவில் 31,268 வாக்காளர்களும், மன்முனைப்பற்று ஆரையம்பதிப் பிரிவில் 24,428 வாக்காளர்களும், வவுனதீவுப் பிரிவில் 22,237 வாக்காளர்களும், ஏறாவூர் நகர் பிரிவில் 26,463 வாக்காளர்களும், ஏறாவூர்பற்று செங்கலடிப் பிரிவில் 23,092 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர் பற்று செங்கலடிப் பிரிவில் 28,893 வாக்காளர்களும், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரிவில் 19,442 வாக்காளர்களும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரிவில் 18,518 வாக்காளர்களும், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் முஸ்லிம் பிரிவில் 19,984 வாக்காளர்களும், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடிப் பிரிவில் 16,754 வாக்காளர்களும், கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரிவில் 16,337 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதியடைந்துள்ளனர்.

பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் மண்முனை தென்எருவில்பற்று களுவாஞ்சிக்குடிப் பிரிவில் 46,275 வாக்காளர்களும், போரதீவுப்பற்று வெல்லாவெளிப் பிரிவில் 31,459 வாக்காளர்களும், மன்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரிவில் 19,337 வாக்காளர்களும் இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியடைந்திருப்பதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.